வீடு / சமையல் குறிப்பு / காய்கறி குழி பணியாறம்

Photo of Vegetable Kuzhi Paniyaram by Poonam Bachhav at BetterButter
1652
26
4.7(0)
0

காய்கறி குழி பணியாறம்

May-10-2016
Poonam Bachhav
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 1 கப் அரிசி
  2. 1/2 கப் தோல் நீக்கப்பட்டு உடைத்த கருப்பு உளுந்து
  3. 1/2 கப் கடலைப்பருப்பு
  4. இஞ்சி 1/2 இன்ச் துண்டு
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 1 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  8. 1 கேரட் பொடியாக நறுக்கப்பட்டது
  9. 2-3 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. 2-3 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. கழுவி அலசப்பட்ட அரிசி. உளுந்தையும் கடலைப்பருப்பையும் சேர்த்து அவற்றையும் கழுவி அலசிக்கொள்ளவும். அரிசி பருப்புகளைத் தனித்தனியே போதுமானத் தண்ணிரில் ஊறவைக்கவும், இரவு முழுவதும்.
  2. அடுத்த நாள், அரிசியையோ பருப்பையோ அலசவேண்டாம். வடிக்கட்டி ஊறவைத்ததிலேயே தண்ணீரை விட்டுவைக்கவும். அரைக்கும்போது அதே தண்ணீரை நாம் பயன்படுத்துவோம். இப்போது அரிசியைத் தனியாக கிரைண்டரைப் பயன்படுத்தி அரைத்துக்கொள்ளவும்.
  3. தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடர்த்தியான மாவாக அரைத்துக்கொள்ளவும். அதேபோல ஒரு கிரைண்டரில் பருப்புகளை அரைத்துக்கொள்ளவும். இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைக்கும்போது ஊறவைத்த பருப்புடன் சேர்க்கவும்.
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த அரிசியையும் பருப்பு மாவையும் சேர்த்து உங்கள் கைகளால் அல்லது கரண்டியால் உப்பை சேர்க்கவும். மூடி குறைந்தது 4-5 மணி நேரங்கள் விட்டுவைக்கவும்.
  5. இந்த நொதித்த மாவிலிருந்து நீங்கள் பனியாறத்தைத் தயாரிக்கலாம். ஆனால் காய்கறிகளைச் சேர்த்தால் அதிகம் இறுக்கமாகிவிடும். இனிப்பு சோளம், பச்சைப்பட்டாணி, நன்றாக நறுக்கப்பட்ட கேரட்டு, கொத்துமல்லி ஆகியவற்றை மாவுடன் சேர்க்கலாம்.
  6. சூடுபடுத்தப்பட்ட வானலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முதலில் காய்கறிகளை வதக்கி, நொதித்த மாவில் சேர்த்துக்கொள்ளவும். மாவுடன் காய்கறிகளை நன்றாக ஒரு கரண்டியைக் கொண்டு கலந்துவிடவும்.
  7. 1-2 துளி எண்ணெயை ஒவ்வொரு பனியாறக் குழியிலும் விட்டு நடுத்தர தீயில் சூடுபடுத்தவும். பள்ளத்தில் 3/4 அளவு மாவை நிரப்பவும் (வேகும்போது அது உப்பும் என்பதால்)
  8. பாத்திரத்தை முடி பனியாறம் சிறு தீயிலிருந்து நடுத்தர தீயில் 2-3 நிமிடங்கள் கீ்ழ் பாகம் பொன்னிறமாகும்வரை வேகவைத்து, ஒவ்வொரு பனியாறத்தையும் ஒரு மரக்குச்சியால் திருப்பிப்போட்டு சமைக்கவும்.
  9. 1-2 நிமிடங்கள் மூடாமல் வேகவைக்கவும். நான் மிகவும் குறைந்த அளவே எண்ணெய் பயன்படுத்தினேன். பனியாறம் பாத்திரத்தோடு ஒட்டிக்கொள்ளும் என்பதால். பாரம்பரியமான இரும்பு பாத்திரத்தைப் பயன்படுத்தினால், குறைந்தது 1/4 தேக்கரண்டி ஒவ்வொரு பள்ளத்திற்கும் தேவைப்படும்.
  10. பனியாறத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். உங்கள் விருப்பத்திற்கேற்ற சட்டினியுடன் சூடாகப் பரிமாறி இந்த ஆரோக்கியமான உணவை உங்கள் அன்பிற்குரியவர்களோடு மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்