வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast by Tanushree Bhowmik at BetterButter
2794
32
4.7(0)
0

எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்

May-10-2016
Tanushree Bhowmik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
0 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 0

  1. பேபி உருளைக்கிழங்கு (வேகவைத்து தோலுரிக்கப்பட்டது) 500 கிராம்
  2. தேங்காய் எண்ணெய் 3-4 தேக்கரண்டி
  3. கடுகு ½ தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு ½ தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை 2 கொத்து
  6. நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது 2
  7. பச்சை மிளகாய், நறுக்கப்பட்டது 2
  8. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  9. நடுத்தர அளவுள்ள தக்காளி, துண்டாக்கப்பட்டது 2
  10. மஞ்சள் ½ தேக்கரண்டி
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. செட்டிநாடு மசாலாப் பொடி 2 தேக்கரண்டி
  13. கொத்துமல்லி இலைகள், அலங்காரத்திற்காக
  14. செட்டிநாடு மசாலா கலவை:
  15. தேங்காய்பால் ½ தேக்கரண்டி
  16. சீரகம் 2 தேக்கரண்டி
  17. மிளகு 1 தேக்கரண்டி
  18. மல்லி 2 தேக்கரண்டி
  19. காய்ந்த மிளகாய் 4ல் இருந்து 5
  20. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  21. இலவங்கப்பட்டை 1 இன்ச்
  22. கறிவேப்பிலை 1 கொத்து
  23. பூண்டு 4 பற்கள்
  24. இஞ்சி (துருவப்பட்டது) 2 தேக்கரண்டி
  25. பச்சை ஏலக்காய் 3-4 பற்கள்
  26. கிராம்பு 5-6
  27. ஜாதிக்காய் ¼ தேக்கரண்டி
  28. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைத் தாளித்துக்கொள்ளவும். கடுகு பொறிந்ததும், உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  2. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  3. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை ஆவியாகும்வரை வறுக்கவும்.
  4. தக்காளி சேர்த்து மசாலாவில் எண்ணெய் மிதக்கும் வரை சிறு தீயில் வறுக்கவும்.
  5. அரைத்த மசாலா, மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். சமமாகப் பூசுவதற்குக் கிண்டிகொள்ளவும்.
  6. அரை கப் தண்ணீர் சேர்த்து சாறு அடர்த்தியாகும்வரை சிறு தீயில் வேகவைக்கவும்.
  7. உருளைக்கிழங்கு சேர்த்து தீயை அதிகரித்து கிட்டத்தட்ட காய்ந்த மொறுமொறுப்பான புள்ளிகள் உருளைக்கிழங்கின் மீது தோன்றும்வரை வறுக்கவும்.
  8. தீயிலிருந்து இறக்கி நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  9. செட்டிநாடு மசாலா கலவைக்காக: இஞ்சி, பூண்டு, தேங்காயை எண்ணெயில் வறுக்கவும்.
  10. மசாலாக்களை வெறுமனே தனித்தனியாக வறுக்கவும்.
  11. அனைத்து பொருள்களையும் கலந்து மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்