வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு

Photo of Chettinad Vengaya Poondu Kuzhambu by Karthika Gopalakrishnan at BetterButter
5373
56
5.0(0)
0

செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு

May-11-2016
Karthika Gopalakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  4. கறிவேப்பிலை கையளவு
  5. சாம்பார் வெங்காயம் - 10 தோலுரிக்கப்பட்டது
  6. பூண்டு - 20 பற்கள் தோலுரிக்கப்பட்டது
  7. தக்காளி 1 பெரிய அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. தேவையான உப்பு
  10. சர்க்கரை 1/2 தேக்கரண்டி
  11. வறுப்பதற்கு & அரைப்பதற்கு:
  12. மல்லி - 2 தேக்கரண்டி
  13. காய்ந்த மிளகாய் - 5ல் இருந்து 7
  14. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 தேக்கரண்டி
  16. மிளகு - 1 தேக்கரண்டி
  17. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  18. எண்ணெய் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் புளியை ஊறவைக்கவும். பிழிந்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும்.
  2. 2. 	 ஒரு சிறிய வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி நடுத்திர தீயில் அனைத்து பொருள்களையும் கடலைப்பருப்பு பொன்னிறமாகும்வரையும் நல்ல வாசனை வெளியேறும்வரையிலும் வறுக்கவும். ஆறவிட்டு ஒரு மிக்சியில் சாந்தாக அரைத்துக்கொள்க.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. கடுகு சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  4. தோலுரித்த சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் சேர்க்கவும். அது 6 – 7 நிமிடங்களுக்கு வெங்காயம் வெளுக்கும்வரை வேகவைத்து, நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து கூழாகும்வரை வேகவைக்கவும்.
  5. அரைத்த மசாலாவையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். பச்சை வாடை வெளியேறும்வரை வேகவைக்கவும்.
  6. புளிக்கரைசலைச் சேர்த்து தேவையானத் தண்ணீரையும் சேர்க்கவும்.
  7. ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  8. சூடான சாதத்தோடு பரிமாறி மணமான ருசியான குழம்பை அனுபவிக்கவும். ’ இந்தக் குழம்பை பப்படத்தோடு முயற்சிக்க மறக்காதீர். எண்ணெய் பிரியும்வரை நடுத்தர தீயில் வேகவைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்