வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ பிரியாணி

Photo of Jackfruit Biryani  by Saras Viswam at BetterButter
1615
7
0.0(0)
0

பலாப்பழ பிரியாணி

May-11-2016
Saras Viswam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாப்பழம் தோலுரிக்கப்பட்டு பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்டு பொறிக்கப்பட்டது - 1 சிறியது
  2. பாஸ்மதி அரிசி 15 நிமிடங்கள் ஊறவைக்கப்பட்டது - 1 & 1/2 கப்
  3. பே இலைகள் - 2
  4. கிராம்பு - 3-4
  5. ஏலக்காய் - 9
  6. இலவங்கப்பட்டை - 1 இன்ச்
  7. ஷா சீரகம் - 1 தேக்கரண்டி
  8. கெட்டித் தயிர் - 1 1/2 கப்
  9. வெங்காயம் வறுத்தது - 1 கப்
  10. உப்பு - சுவைக்கேற்றபடி
  11. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் - 1/2 கப்
  13. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  14. பச்சை மிளகாய் - 4
  15. இஞ்சி மெல்லியத் துண்டுகளாக நறுக்கப்பட்டது - 1 இன்ச் துண்டு
  16. நெய் - 2 தேக்கரண்டி
  17. கரம் மசாலா தூள் தூவுவதற்கு - 2 தேக்கரண்டி
  18. ஏலக்காய்ப் பொடி தூவுவதற்கு - 1/4 தேக்கரண்டி
  19. கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது - 2 தேக்கரண்டி
  20. புதிய புதினா இலைகள் - 22 - 26
  21. குங்குமப்பூ - கொஞ்சம்
  22. பால் - 2 தேக்கரண்டி
  23. பன்னீர் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி துண்டுகள் பொன்னிறமதாகும்வரை வறுக்கவும்.
  2. ஒரு நான்-ஸ்டிக் வானலியில் தண்ணீரை சூடுபடுத்திக்கொள்க. பே இலைகள், கருப்பு ஏலக்காய், கிராம்பு, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஷா சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. அரிசியை வடிக்கட்டி சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு சேர்த்துக் கலந்து பாதியளவு வேகவைக்கவும்.
  4. ஒரு ஆழமான நான்-ஸ்டிக் வானலியில் தயிர், 3/4 கப் வறுத்த வெங்காயம், சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி சீவல்கள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 1 தேக்கரண்டி நெய், வறுத்த பலாப்பழம், 1 தேக்கரண்டி கரம் மசாலா பவுடர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  5. 1 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள், 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள், 8-10 புதினா இலைகளைச் சேர்த்து கலக்கவும். 1/4 கப் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும்.
  6. குங்குமப்பூவை 2 தேக்கரண்டி கொதிநீரில் கலந்து, 2 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி பன்னீரைச் சேர்க்கவும். பாதி வெந்த அரிசியை வடிக்கட்டி தயிர் கலவையின் மீது பரவச்செய்யவும். ஒரு சிட்டிகை கரம் மசாலாத் தூளையும் பச்சை ஏலக்காய்த் தூளையும் தூவவும்.
  7. 7-8 புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள், மீதமுள்ள வறுத்த வெங்காயம், நெய் மற்றும் 1/2 குங்குமப்பூ பாலைச் சேர்க்கவும்.
  8. மீதமுள்ள சாதத்தை வடிக்கட்டி மேல் அடுக்குக் மேலாகப் பரவச் செய்யவும். 7-8 புதினா இலைகளையும் மீதமுள்ள குங்குமப்பூவையும் சாதத்தின் அடுக்கின் மீது பரவச்செய்யவும்.
  9. நெய் சேர்க்கவும். மூடி அதிக சூட்டில் முதல் 2 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன்பிறகு தீயைக் குறைத்து 12-15 நிமிடங்கள் அரிசி வேகும்வரை சமைக்கவும். பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்