Photo of Puinji by Lakshmi Vasanth at BetterButter
863
13
0.0(0)
0

பூய்ஞ்சி

May-12-2016
Lakshmi Vasanth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி பொடியாக நறுக்கப்பட்டது - 1கப்
  2. கடுகு - 2 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 8
  4. புளி (பழைய புளி நல்லது) - 2 உருண்டை எலுமிச்சை அளவு,
  5. கடலை பருப்பு - 2தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - கொஞ்சம்
  7. பெருங்காயம் - 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி - 2 தேக்கரண்டி
  9. வெல்லம் - 2 தேக்கரணடி
  10. எண்ணெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து அடர்த்தியான ஒரு சாந்தைத் தயாரிக்கவும். இஞ்சியையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து மஞ்சள்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். இப்போது புளிக்கரைசலை இவற்றோடு ஊற்றவும்.
  3. தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடி போட்டி 5 நிமிடங்கள் கலவையை நன்றாகக் கொதிக்கவிடவும். புளி பச்சை வாடை போகும்வரை கொதிக்கவிடவும், பாதி திடச் சாந்தாகக் குறைந்துவிடும்.
  4. இந்த நிலையில், வெல்லத்தைச் சேர்ப்பது கலவையைத் தளர்த்தும். கொதிக்க விடுவதைத் தொடரவும். வெல்லத்தால் பளபளப்பான வடிவம் கிடைக்கும். பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. நாம் ஊற்றிய எண்ணெய் கடாயில் உள்ள கலவையின் பக்கங்களில் வருவதைக் காண்பீர்கள். கலவை நன்றாக வெந்துவிட்டது என்று பொருள். தீயை நிறுத்தவும். ஆறவிட்டு ஒரு காற்றுப் புகாத பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  6. வெளியே 4-5 நாள்களுக்கு வைத்துக்கொள்ளலாம். அதிக அளவில் தயாரித்தால் - ஒரு பெரிய பகுதியை பிரிட்ஜில் வைத்து தினசரிப் பயன்பாட்டிற்குச் சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்