வீடு / சமையல் குறிப்பு / புளி மீன் குழம்பு

Photo of Tamarind Fish Curry by Taruna Deepak at BetterButter
5516
44
0.0(0)
0

புளி மீன் குழம்பு

May-12-2016
Taruna Deepak
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 550-600 கிராம் மீன் துண்டுகள் ( நான் கட்லா மீனைப் பயன்படுத்தினேன், ஆனால் வெள்ளைச் சதை மீன் எதுவும் இதற்குச் சரிவரும்)
  2. 2 தேக்கரண்டி கூடுதலாக 2 தேக்கரண்டி எண்ணெய்
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 1/4 வெந்தயம்
  5. 3/4 நறுக்கப்பட்ட வெங்காயம் (சின்ன வெங்காயம்)
  6. 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  7. 1 தேக்கரண்டி பூண்டு விழுது
  8. 1 மற்றும் 1/2தேக்கரண்டி புளிக்கரைசல் (கடையில் வாங்கியத்தை நான் பயன்படுத்தினேன்)
  9. 8-10 கறிவேப்பிலை
  10. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  11. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் (+/-)
  12. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகு அல்லது தேகி மிர்ச் (காஷ்மீரி லால் மிர்ச் என்றும் சொல்லப்படும்)
  13. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  14. சுவைக்கேற்ற உப்பு (மீன் கழுவுவதற்கும் சேர்த்து)
  15. 200 மிலி தேங்காய் பால் (நான் கடையில் வாங்கியத்தைப் பயன்படுத்தினேன்)
  16. 1/2 c தண்ணீர்
  17. 2 தேக்கரண்டி நறுக்கப்பட்ட புதிய கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. 1/2 கப் தண்ணீர் கொண்டு புளிக்கரைசலில் தண்ணீர் சேர்க்கவும், எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கறிவேப்பிலையைக் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மீனைச் சுத்தப்படுத்தி ஒரு முறை கழுவிக்கொள்ளவும். தண்ணீரை வடிக்கட்டி அதன் மீது கொஞ்சம் உப்பைத் தூவி 2 நிமிடங்களுக்கு விட்டு வைக்கவும். மீண்டும் மீனைக் கழுவி அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டி அல்லது தட்டி உலர்த்தவும்.
  4. ஒரு கனமான நான் ஸ்டிக் பாத்திரத்தில், 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி (தேவைப்பட்டால் அதிகம் சேர்க்கவும்) தொகுப்புகளாக மீனை (அதிகத் தீயில்) பொன்னிறமாகும்வரை பொறித்தெடுக்கவும் (தோராயமாக ஒவ்வொரு பக்கமும் அரை நிமிடம்).
  5. மீன் துண்டுகளை உறிஞ்சும் தாளில் அல்லது சமையல் துண்டில் எடுத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும்.
  6. மீன் பொறித்த அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெ சேர்த்து சூடுபடுத்தி கடுகு வெந்தயம் சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்க்கவும். மிதமான சூட்டில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்கவும்.
  7. இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வாசனையாகவும் பொன்னிறமாகவும் மாறும்வரை வறுக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.
  8. தீயை அடக்கி, புளிக்கரைசலைச் சேர்க்கவும். அதனோடு உலர் மசாலாக்களையும் உப்பையும் சேர்க்கவும். தீயை மிதமானச் சூட்டிலிருந்து அதிகமானச் சூட்டுக்கு அதிகரித்து மீண்டும் தண்ணீர் முற்றிலுமாக உறிஞ்சப்படும்வரை வதக்கவும்.
  9. இப்போது தேங்காய்ப் பாலைச் சேர்த்து தீயை மீண்டும் குறைக்கவும் (தேங்காய்ப்பால் பிரியாமல் தடுக்க). வறுத்த மீன் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் குழம்பைக் கலக்கவும்.
  10. மீதமுள்ள 1/4 கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகரிக்கவும், குழம்பு கொதி நிலைக்கு வரட்டும். மீண்டும் தீயை மிதமானச் சூட்டுக்குக் குறைத்து குழம்பை சிம்மில் மூடி 3-4 நிமிடங்கள் விடவும்.
  11. நறுக்கப்பட்ட புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து, ஆவிபறக்கும் சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.
  12. குறிப்பு: மிளகாய் மற்றும் புளியின் அளவை சுவைக்கேற்றபடி சரிசெய்யவும். புளி அதிகமாக இருப்பதாகத் தெரிந்தால், கொஞ்சம் தேங்காய் பால் அல்லது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.
  13. குறிப்பு: சுவையை அதிகரிக்க பரிமாறுவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தக் குழம்பைத் தயாரிக்க அறிவுறுத்துகிறேன். இந்த வகையில் உடனடியாகப் பரிமாறுவதைக் காட்டிலும் குழம்பின் சுவை சிறப்பாக இருக்கும். உண்மையில் அடுத்தநாள் இது இன்னும் சிறப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்