Photo of Sevai Vedam by Lakshmi Vasanth at BetterButter
3630
17
4.5(0)
0

சேவை வடம்

May-12-2016
Lakshmi Vasanth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 5 கப்
  2. ஜவ்வரிசி ஊறவைத்தது - 1 கப்
  3. பச்சை மிளகாய் - 14
  4. எலுமிச்சை 4 எண்ணிக்கை
  5. உப்பு - 5 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  7. தண்ணீர் 7 கப்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் - மிளகாயையும் ஊறவைத்த ஜவ்வரிசியையும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  2. இந்தக் கலவையை ஒரு கடாயில் ஊற்றி - 6 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு பெருங்காயத்தையும் சேர்த்து ஜவ்வரிசி பளபளப்பாக மாறும்வரை கொதிக்கவிடவும். அரிசி மாவை இந்தக் கலவையோடு சேர்க்கவும்.
  3. கையை எடுக்காமல் மாவு அடர்த்தியாகும்வரை தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கவும், ஈரக் கையோடு அழுத்தினால் மாவு கைகளில் ஒட்டாது. பிறகு தீயை நிறுத்தவும். இப்போது எலுமிச்சைச் சாறைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. மூடிவைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, கொஞ்சமாக எடுத்து உருளைக்கிழங்குடன் மசித்து மிருதுவான உருண்டைகளைத் தயாரிக்கவும். இப்போது உங்கள் கைகளுக்கு எண்ணெய் தடவி சிறுசிறு உண்டைகளைச் செய்து சேவை வட சல்லடை வழியாக பிளாஸ்டிக் ஷீட்டில் பிழியவும்.
  5. வெயிலில் 2 நாட்களுக்குக் காயவைக்கவும். குறிப்பு: அரிசியின் தரத்தைப் பொறுத்து அளவு மாறுபடும். அதனால் போதுமான அளவு மாவைக் கையிருப்பில் வைத்திருக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்