வீடு / சமையல் குறிப்பு / பிராமண பாணி வத்தக் குழம்பு

Photo of Brahmin style Vathal Kuzhambu by Jayanthi Padmanabhan at BetterButter
7435
51
4.5(0)
0

பிராமண பாணி வத்தக் குழம்பு

May-12-2016
Jayanthi Padmanabhan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சுண்டைக்காய் வத்தல்/ உலர்த்த சுண்டைக்காய் ஒரு கப் (வெயிலில் உலர்த்திய எந்தக் காய்கறியையும் மாற்றாகப் பயன்படுத்தலாம்)
  2. சாம்பார் வெங்காயம் - 1கப் தோலுரிக்கப்பட்டு பாதியாக நறுக்கப்பட்டது
  3. கறிவேப்பிைலை - 1 கொத்து
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. புளிக்கரைசல் எலுமிச்சை அளவுள்ள உருண்டையிலிருந்து
  6. மஞ்சள் தூள் சுவைக்கேற்ற உப்பு
  7. வெல்லம் - 2 தேக்கரண்டி துருவப்பட்டது (சுவைக்கேற்றபடி எடுத்துக்கொள்ளவும்)
  8. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  9. முழு காய்ந்த மிளகாய் - 4
  10. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. உளுந்து - 1 தேக்கரண்டி
  12. மல்லி - 1 தேக்கரண்டி
  13. முழு மிளகு - 1 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  15. பச்சரிசி - 1/2 தேக்கரண்டி
  16. வெந்தயம் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கணமான அடிப்பாகமுள்ள ஒரு கடாயைச் சூடுபடுத்தி மசாலா சாந்துக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களை வெறுமன வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாகும் வரையிலும் பொருள்கள் நன்றாக வறுபடும்வரையிலும். சிறிது தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில், நல்லெண்ணை சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்கச் செய்யவும். நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வறுக்கவும்.
  3. சுண்டைக்காய் வத்தலைச் (அல்லது உங்களுக்குப் பிடித்த வெயிலில் உலத்திய காய்கறி ஏதாவது) சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
  4. புளிக்கரைசலை ஊற்றிக்கொள்ளவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். தீயை மிதமானச் சூட்டிற்குக் குறைத்து கலவை 5-10 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.
  5. மசாலா சாந்தைக் கலந்து கொதிக்கும் புளிக்கலவையோடு சேர நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும், அது ஒட்டும் பதத்தில் இருந்தால். உங்களுக்குப் பிடித்த பதத்திற்கு செய்துகொள்ளவும். துருவப்பட்ட வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவை பார்த்து உப்புக்காரத்தைச் சரிசெய்தகொள்ளவும்.
  6. அடுப்பை நிறுத்துக. உங்களுக்குத் தேவைப்பட்டால் நல்லெண்ணெயைத் தாளித்து நிறைவு செய்யவும். சாதம் மற்றும் அப்பளத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்