இறால காய்கறி குழம்பு | Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu in Tamil

எழுதியவர் Priya Satheesh  |  13th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu recipe in Tamil,இறால காய்கறி குழம்பு, Priya Satheesh
இறால காய்கறி குழம்புPriya Satheesh
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    31

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

44

0

இறால காய்கறி குழம்பு recipe

இறால காய்கறி குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu in Tamil )

  • 250 கிராம் இறால்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 2 தேக்கரண்டி வடகம் (மாற்று - கடுகு, வெந்தயம், சீரகம்)
  • 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  • 5 பூண்டு பற்கள், நசுக்கப்பட்டது
  • 1/2 கப் தக்காளி, பொடியாக நறுக்கப்படடது
  • 2 உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கப்பட்டது
  • 1 முருங்கைக்காய், துண்டுபோடப்பட்டது
  • 5 கத்திரிக்காய், சதுரமாக நறுக்கப்பட்டது
  • 1/4 மஞ்சள் தூள்
  • 1 1/2 - 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  • 3 தேக்கரண்டி மல்லித்தூள்
  • எலுமிச்சை அளவு புளி, 1 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு பிழிந்தெடுக்கப்பட்டது
  • கையளவு கறிவேப்பிலை
  • சுவைக்கேற்ற உப்பு

இறால காய்கறி குழம்பு செய்வது எப்படி | How to make Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடகத்தைச்சேர்த்து அதனுடன் நசுக்கப்பட்ட பூண்டு மற்றும் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்க்கவும்.
  2. ஒரு நிமிடத்திற்கு அல்லது நிறம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  3. கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொடியாகத் தக்காளியை நறுக்கிக்கொண்டதையும் சேர்க்கவும்.
  4. ஒரு நிமிடம் அல்லது தக்காளி மிருதுவாகும்வரை வறுக்கவும்.
  5. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக் கலக்கவும்.
  6. மஞ்சள் தூளுடன் மிளகாய்த் தூள் மல்லித்தூளையும் இப்போது சேர்க்கவும்.
  7. நன்றாகக் கலந்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  8. புளிக்கரைசலோடு தேவையான உப்பையும் சேர்க்கவும்.
  9. 1/2 -1 கப் தண்ணீர் சேர்த்து மூடி காய்கறிகள் 3/4 பாகம் வேகும்வரை வேகவைக்கவும்.
  10. இதற்கிடையில், இறாலைச் சுத்தப்படுத்தி நரம்பை எடுத்துவிட்டுக் கழுவவும்.
  11. சுத்தப்படுத்தப்பட்ட இறாலை குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  12. மீதமுள்ள கறிவேப்பிலையைச்சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
  13. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Reviews for Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.