Photo of Podi Idli by Priya Mani at BetterButter
10442
80
4.3(0)
0

பொடி இட்லி

May-13-2016
Priya Mani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி 4 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  4. வெந்தயம் 1 தேக்கரண்டி
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. உளுந்து 3/4 கப்
  7. கடலைப்பருப்பு 1/4 கப்
  8. 2 தேக்கரண்டி வழக்கமான சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
  9. சிவப்பு மிளகாய் 20 (அதிகமானக் காரத்தேவைக்கு கூடுதலாகச் சேர்க்கவும்
  10. வெள்ளை எள்ளு 2 தேக்கரண்டி
  11. தேவையான அளவு உப்பு
  12. ஒரு சிட்டிகை பெருங்காயம்

வழிமுறைகள்

  1. இட்லி மாவு: அளப்பதற்கு அதே கப்பைப் பயன்படுத்தவேண்டும். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தோடு தனித்தனியாக குறைந்தது 5ல் இருந்து 6 மணி நேரங்கள் இரவில் உறவைப்பது நல்லது.
  2. மிருதுவான மாவாக அரைத்து தேவையான உப்பு கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். நொதிக்கவிடவும். நொதிக்க ஆரம்பித்ததும் மாவு தானாக உப்பும். இது 4ல் இருந்து 6 மணி நேரங்கள் பிடிக்கும்.
  3. இட்லி பொடிக்கு: உப்பு பெருங்காயத்தைத் தவிர மேலே குறிப்பிட்டப்பொருள்களை வெறுமனே வறுத்துக்கொள்ளவும். சிவப்பு மிளகாய்க்கு ஒரு தேக்கரண்டி எண்ணெய் மொறுமொறுப்பாக வறுப்பதற்குச் சேர்த்துக்கொள்ளவும். ஆறட்டும். ஒரு பிளெண்டரில் அனைத்துப் பொருள்களையும் சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தோடு போடவும்.
  4. கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். திறந்த நிலையில் 15 நிமிடங்கள் சற்று உலரவிட்டு அதன்பிறகு காற்றுப்புகாதப் பாத்திரத்தில் அதன் தன்மை கெடாமல் இருக்க வைத்துக்கொள்ளவும்.
  5. 2 தேக்கரண்டி இட்லி பொடி எடுத்து குழி தோண்டி 2 தேக்கரண்டி வழக்கமான சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கவும். கரண்டியால் அல்லது உங்கள் விரல் நுணியால் கலக்கிக்கொள்ளவும். இந்த சாந்தை இட்லியின் இரண்டு பக்கங்களிலும் தடவி குறைந்தது 1 மணி நேரத்திற்கு விடவும்.
  6. அப்படியே அல்லது அதன் மீது ஒரு தாளிப்பைப் போட்டு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்