வீடு / சமையல் குறிப்பு / அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில்

Photo of Akkaravadisal or Akkara Adisil by Sindhu Murali at BetterButter
1362
15
5.0(0)
0

அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில்

May-16-2016
Sindhu Murali
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1/2 கப் (இட்லி அரிசியைத் தவிர எந்த அரிசியும்)
  2. பாசிப்பயிர் - 2 தேக்கரண்டி
  3. வெல்லம் - 1 3/4 கப்
  4. பால் 4-5 கப்
  5. நெய் - 4 தேக்கரண்டி
  6. முந்திரிபருப்பும் உலர் திராட்சையும் - 10 ஒவ்வொன்றும்
  7. ஏலக்காய் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
  8. சமையல் கற்பூரம் - ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது)
  9. குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. உலர் பாத்திரத்தில் அரிசியையும் பாசிப்பயிரையும் வாசனை வரும்வரை வறுக்கவும். கழுவிவிட்டுப் பாலைச் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 9 விசில் வரை வேகவைக்கவும். ஒரு அருமையானப்பதத்தை அடைய முயற்சிக்கிறோம்.
  2. வெல்லத்தை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். வெல்லம்முழுவதுமாக் கரையவேண்டும், உங்களிடம் தெளிவானத் திரவம் இருக்கவேண்டும். இதில் அழுக்கு இல்லாமல் வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. இதற்கிடையில், குங்குமப்பூவை வெதுவெதுப்பானப் பாலில் ஊறவைக்கவும். கடாயை சூடுபடுத்தி கொஞ்சம் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர் திராட்சையை பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
  4. ஒரு கணமானப் பாத்திரத்தை எடுத்து சாதத்தையும் பாசிப்பயிர் கலவையையும் சேர்க்கவும். அவற்றோடு வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தவும். கொதிக்க ஆரம்பிக்கும், கலவை மேலெழும்பும். வெல்லத்தின் வாசனை அற்புதமாக இருக்கம்.
  5. குங்குமப்பூ, ஏலக்காய், வறுத்த உலர் பழங்களைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்