வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை

Photo of Parippu Vada / Dal Vada by Sharanya Raghuraman at BetterButter
11070
60
4.0(0)
1

பருப்பு வடை

May-17-2016
Sharanya Raghuraman
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
15 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 15

  1. துவரம் பருப்பு - 3/4 கப்
  2. கடலைப் பருப்பு 1/4 கப்
  3. சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை
  4. சின்ன வெங்காயம் - 5ல் இருந்து 5, பொடியாக நறுக்கப்பட்டது
  5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  6. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  7. இஞ்சி - 2 தேக்கரண்டி, பொடியாக நறுக்கப்பட்டது
  8. பச்சை மிளகாய் - 2ல் இருந்து 3 எண்ணிக்கை, நறுக்கப்பட்டது
  9. கறிவேப்பிலை - 10 இலைகள், பொடியாக நறுக்கப்பட்டது
  10. புதினா இலைகள் - 5 எண்ணிக்கை, நன்றாக நறுக்கப்பட்டது
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 4 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. 4 மணி நேரத்திற்குப் பிறகு, தண்ணீரை பருப்பிலிருந்து முழுமையாக வடிக்கட்டிவிடவும். ஊறவைத்த பருப்பை சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம், புதினா இலைகளை தண்ணீர் சேர்க்காமல் சீரற்று வறுத்துக்கொள்ளவும். மென்மையானச் சாந்தாக அரைபடாமல் பார்த்துக்கொள்ளவும். முழு பருப்புகள் இங்குமங்கும் இருப்பது நன்று.
  3. நன்றாக நறுக்கப்பட்ட இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  4. போதுமான எண்ணெய் நடுத்தர சிறு தீயில் ஒரு வறுக்கும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. உங்கள் கைகளை ஈரமாக்கிக்கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவுள்ள உருண்டையை பருப்புக் கலவையிலிருந்து எடுத்துக்கொள்ளவும். உள்ளங்ககை மத்தியில் எடுத்து வடைகளைத் தட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் விடவும்.
  6. அனைத்துப் பக்கங்களும் பொன்னிறமாக மொறுமெறுப்பாக மாறும் வரை பொறிக்கவும்.
  7. இந்த வடையை சமையல் துண்டிற்கு மாற்றி அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக்கொள்ளவும். டீ அல்லது காபியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்