வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோழி பணியாறம்

Photo of Egg Kuzhi Panniyaram by Sharanya Raghuraman at BetterButter
860
15
0.0(0)
0

முட்டை கோழி பணியாறம்

May-17-2016
Sharanya Raghuraman
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 5 எண்ணிக்கை
  2. கடலை மாவு - 1/4 கப்
  3. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  4. மிளகு - 1 தேக்கரண்டி
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் - 3 எண்ணிக்கை, நன்றாக நறுக்கப்பட்டது
  10. வெங்காயம் - 1 எண்ணிக்கை, பொடியாக நறுக்கப்பட்டது
  11. கறிவேப்பிலை - 5 இலைகள், பொடியாக நறுக்கப்பட்டது
  12. கொத்துமல்லி - கொஞ்சம், பொடியாக நறுக்கப்பட்டது
  13. எண்ணெய் - 1தேக்கரண்டி ஒவ்வெரு பணியாறமாக வேகவைப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டைையை உடைத்து ஒரு முள் கரண்டியால் அடித்துக்கொள்ளவும். உப்பும் மிளகையும் இதனோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எடுத்து வைக்கவும்.
  2. வேறொரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். போதுமான தண்ணீர் சேர்க்கவும், மாவுக்காக. மாவு மிகவும் கட்டியாகவோ தண்ணீர் போன்றோ இருக்கக்கூடாது.
  3. இப்போது முட்டைக் கலவையை இந்த மாவுடன் சேர்த்து கொஞ்சம் உப்பும் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். மாவை நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
  4. ஒரு நான்-ஸ்டிக் ஆப்ப/பணியாற பாத்திரத்தை எடுத்து மிதமானச் சூட்டில் சூடுபடுத்தவும். 1 தேக்கரண்டி எண்ணெய் ஆப்பச்சட்டியின் ஒவ்வொரு குழியிலும் உற்றவும்.
  5. எண்ணெய் போதுமான அளவு சூடானது, ஆப்பச் சட்டிக் குழியில் மாவை ஊற்றவும். குழியில் 3/4 அளவுக்கு மட்டும் நிரப்பவும், சமைக்கும் போது அது உப்பும். மூடியைப் போட்டு 3ல் இருந்து 4 நிமிடங்கள் வேகவைக்கவும்
  6. அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு வேகவைக்கவும் அல்லது அதன் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை.
  7. எல்லாம் தயார்! டீ அல்லது காபியுடன் பரிமாறத் தயார். எந்த சலாதுடனும் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்