வீடு / சமையல் குறிப்பு / சிதம்பரம் கத்திரிக்காய்/ கத்திரிக்கய் கொஸ்து

Photo of Chidambaram Kathirikai / Brinjal Gothsu by Subhashni Venkatesh at BetterButter
5247
56
4.7(2)
0

சிதம்பரம் கத்திரிக்காய்/ கத்திரிக்கய் கொஸ்து

May-18-2016
Subhashni Venkatesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் 7 அல்லது 8 மெலிதாக நறுக்கப்பட்டது, கழுவி தண்டு நீக்கப்பட்டதும்
  2. சின்ன வெங்காயம் 10 (தோலுரிக்கப்பட்டு 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  3. புளிச்சாறு எலுமிச்சம்பழ அளவுள்ள புளியிலிருந்து 3 கப் பிழிந்தெடுக்கப்பட்டது
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  6. எண்ணெய் 4 தேக்கரண்டி
  7. கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிப்புக்கு
  8. வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவு
  9. பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  10. மசாலா தூளுக்கு:
  11. மல்லி 5 தேக்கரண்டி
  12. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  14. மிளகு 1 தேக்கரண்டி
  15. சீரகம் 1/2 தேக்கரண்டி
  16. சிவப்பு மிளகாய் 5 அல்லது 6
  17. வெந்தயம் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மசாலாவிற்காக என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஒன்றாக பொறபொறப்பாக பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கணமான அடிப்பாகமுள்ள கடாயில் எண்ணெயுடன் சூடுபடுத்திக்கொள்ளவும். கத்திரிக்காய் பொலிவிழந்து சற்றே பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இப்போது நறுக்கப்பட்ட வெங்காயத்தை கடாயில் போடவும். 2 நிமிடங்களுக்கு மேல் வறுக்கவும். இப்போது உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  3. புளிச்சாற்றை அதனுள் ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்து கத்திரிக்காய் நன்றாக வெந்ததும், மேஷர் அல்லது கரண்டியால் கத்திரிக்காயை மசித்து, அவற்றோடு வெல்லத்தையும் சேர்க்கவும்.
  4. குழம்பு அடர்த்தியானதும், மசாலா தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொருள்களில் இருந்து எண்ணெய் பிரியும்வரை கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையால் தாளித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jul-10-2019
Kalai Vani   Jul-10-2019

பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது

Tasleem Ibrahim
Dec-17-2018
Tasleem Ibrahim   Dec-17-2018

What dish goes good with this ? Idly or pongal ?

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்