வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் இட்லி/கஞ்சிவரம் இட்லி

Photo of Kancheepuram Idli / Kanchivaram idli by Sandhya Ramakrishnan at BetterButter
5461
80
4.9(0)
0

காஞ்சிபுரம் இட்லி/கஞ்சிவரம் இட்லி

May-19-2016
Sandhya Ramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
32 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 32

  1. பச்சரிசி – 1 கப் (நான் சோனா மசூரி பயன்படுத்தினேன்)
  2. இட்லி அரிசி – 1 கப்
  3. உளுத்தம்பருப்பு – 1 கப்
  4. வெந்தயம் – 1 தேக்கரண்டி
  5. உவர்ப்பு கெட்டித் தயில் – ½ கப்
  6. உப்பு –சுவைக்கேற்ற அளவு
  7. எண்ணெய் அல்லது நெய் – 3 தேக்கரண்டி (நல்லெண்யை சிறந்தது, எண்ணெய் பயன்படுத்தினால்)
  8. கடுகு – 2 தேக்கரண்டி
  9. கடலைபருப்பு – 3 தேக்கரண்டி
  10. சீரகம் – 4 தேக்கரண்டி
  11. மிளகு – 3 தேக்கரண்டி (கரடுமுரடாக பொடியாக்கப்பட்டது)
  12. கறிவேப்பிலை – கைப்படி அளவு
  13. சுக்குப்பொடி – 1 தேக்கரண்டி
  14. பெருங்காயம் – ½ தேக்கரண்டி
  15. முந்திரி பருப்பு – கொஞ்சம்

வழிமுறைகள்

  1. இரண்டு அரிசியையும் கழுவி ஊறவைக்கவும், உளுந்து மற்றும் வெந்தயத்தையும் ஒன்றாகத் தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. கிரைண்டரைப் பயன்படுத்தி ஊறவைக்கத்த அரிசியையும் பருப்பையும் கரடுமுரடான மாவாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். மாவு அடர்த்தியான பதத்தில் இருக்கவேண்டும். வழக்கமான இட்லி மாவைவிட மாவை கரடுமுரடாக அரைத்துக்கொண்டதை உறுதி செய்யவும்.
  3. ஒரு பெரிய பாத்திரத்தில் உப்புடன் சேர்த்து மாவை மாற்றிக்கொள்ளவும். கைகளைப் பயன்படுத்தி மாவை நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். கைகளைப் பயன்படுத்தி மாவைக் கரைப்பது சிறப்பானது துரிதமானது.
  4. நன்றாக உப்பிவரும் அளவிற்கு மாவை நொதிக்கவிடவும் (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு). எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறதோ அதைப்பொறுத்து 8ல் இருந்து 24 மணி நேரங்கள் ஆகலாம். என்னுடைய 24 மணிநேரம் ஆனது.
  5. மாவு புளித்ததும். உவர்ப்பு கெட்டித் தயிரை அதனுடன் சேர்த்து கலக்கவும். இது கூடுதலான உவர்ப்பு அடுக்கைப் பெறுவதற்கு மட்டும் உதவும். உங்களிடம் எதுவும் இல்லையென்றால் இதைத் தவிர்க்கலாம்.
  6. ஒரு கடாயில், நெய் அல்லது எண்ணெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. நான் இரண்டையும் சேர்த்ததைப் பயன்படுத்தினேன். தாளிப்புக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதை மாவில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும், சேர்வதற்கு.
  7. இட்லி தட்டுகளை அல்லது அச்சுகளில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். நான் சிறிது முந்திரிப்பருப்புத் துண்டுகளைச் சேர்த்து அதன் பிறகு மாவை ஊற்றினேன். சிலவற்றிற்கு சிறிய கப்களைப் பயன்படுத்தினேன், சிலவற்றிற்கு இட்லித் தட்டைப் பயன்படுத்தினேன். ஆழமான தட்டைக்கூட இட்லி தயாரிக்க நீங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு துண்டு போட்டுக்கொள்ளலாம்.
  8. தபரவ 15ல் இருந்து 18 நிமிடங்கள் வேகவைக்கவும். இட்லி தட்டுகளில் கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் வெந்துவிடும், ஆனால் ஆழமானப் பாத்திரம் வேவதற்கு அதிக நேரம் ஆகலாம். இந்த இட்லி வழக்கமான இட்லிகளை விட நீண்டநேரம் வேவதற்கு ஆகும்.
  9. மிளகாய் பொடி அல்லது சட்னியுடன் பரிமாறவும். இந்த இட்லி சற்றே காரசாரமாகவும், வாசனையோடும் இருக்கும், நமக்கு மிளகாய்ப்பொடியே போதும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்