வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறுப்பான கருணைக்கிழங்கு உருண்டைகள்

Photo of Crispy Yam balls by Mahi Venugopal at BetterButter
1832
3
4.0(0)
0

மொறுமொறுப்பான கருணைக்கிழங்கு உருண்டைகள்

May-19-2016
Mahi Venugopal
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைக் கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து மசிக்கப்பட்டது)
  2. வெங்காயம் - 1 பெரியது, நன்றாக நறுக்கப்பட்டது
  3. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  4. பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி 0 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்டது
  5. பூண்டு - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்டது
  6. மல்லி - 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்டது
  7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  8. மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை . 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்டது
  10. கடலை மாவு - 3 தேக்கரண்டி
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. எண்ணெய் - 2 கப்

வழிமுறைகள்

  1. கருணைக்கிழங்கைக் குக்கரில் 3 விசில்களுக்கு வேவைக்கவேண்டும். தண்ணீரை ஈர்த்துவிட்டு மசித்து எடுத்துவைக்கவும், ஆறுவதற்காக.
  2. ஆறியதும், இப்போது வெங்காயம், பச்சைமிளகாய், பெருங்காயம் (பொடியாக்கப்பட்டத்தை விரும்புகிறேன், எனெனில் அப்போதுதான் சரியான வாசனையை நீங்கள் பெறமுடியும்), இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, கடலை மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. தண்ணீர் சேர்க்கவேண்டாம். எலுமிச்சை அளவில் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வறுப்பதற்கு முன் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. இப்போது ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடுபடுத்திக்கொள்ளவும். போதுமான அளவு சூடானதும் உருண்டைகளைப் போடவும். ஒரு சமயத்தில் உருண்டைகளுக்கு மேல் போடவேண்டாம். அவ்வப்போது திருப்பிப்போடவும். பொன்னிறமாக மாறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு டிஸ்யூ தாளில் வைக்கவும்.
  5. தீயில் ஒரு கண் இருக்கட்டும். மிதமானதிலிருந்து அதிக தீயிக்கு இடையில் இருக்கவேண்டும். அப்போதுமட்டுமே உங்கள் உருண்டைகள் சமமாக வேகும். சிறதீயில் விட்டீர்களானால் உருண்டைகள் உடைந்துவிடும்.
  6. சூடாகப் பரிமாறவும். தென்னிந்திய உணவுடன் - சைவம் அல்லது அசைவம் எதனோடாவது மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்