வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பூண்டு குழம்பு

Photo of Venghiya poondhu kozhambu by Mahi Venugopal at BetterButter
1134
22
5.0(0)
0

வெங்காய பூண்டு குழம்பு

May-20-2016
Mahi Venugopal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் - 20 எண்ணிக்கை (தோலுரிக்கப்பட்டு கழுவப்பட்டது)
  2. பூண்டு - 5 எண்ணிக்கை (தோலுரிக்கப்பட்ட கழுவப்பட்டது)
  3. புளி - 1 சின்ன ஆரஞ்சு அளவிலான உருண்டை (வெந்நீரில் ஊறவைத்து இரண்டு முறை சாறைப் பிழிந்துகொள்ளவும்)
  4. மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  5. மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. வெல்லம் - 2 தேக்கரண்டி
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. காய்ந்த சிவப்பு மிளகாய் - 2 எண்ணிக்கை ( ஒவ்வொன்றும் இரண்டாக நறுக்கப்பட்டது)
  10. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - 1 கையளவு (சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது)
  12. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  13. முழு வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  14. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
  15. எண்ணெய் (நல்லெண்ணெய் சிறப்பானது) - 4 தேக்கரண்டி
  16. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி எண்ணெயைச் சேர்த்து அது சூடானதும் கடுகைப் பொரிக்கவிடவும். அதன்பிறகு கடலை பருப்பு, பெருங்காயம் சேர்த்து பிறட்டிப்போட்டு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். வெளுக்கும்வரை அவற்றை பிறட்டவும். இப்போது வெந்தயம் சேர்த்து முடிந்ததும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  2. இப்போது மசாலா பகுதி வருகிறது. ஒரு அகலமானத் திறந்த பாத்திரத்தை எடுத்து புளிக்கரைசலைச் சேர்க்கவும். அதன்பிறகு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கலக்கவும். வெல்லம் கரையும் வரை கலக்கவும். இப்போது அனைத்தையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. அடுப்பைப் பற்றவைக்கவும். இப்போது மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும். மேலே எண்ணெய் தனியாக மிதப்பதைப் பார்க்கும்போது, அது இறக்குவதற்கான நேரம். இப்போது இறுதியாக வெந்தயத் தூளைச் சேர்க்கவும்.
  4. சுத்தமானவொரு உலர்ந்த பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு வாரத்திற்கு பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். வெ ள்ளைச் சாதம், தோசை, இட்லியுடன் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்