வீடு / சமையல் குறிப்பு / கீரை சாம்பார்

Photo of Keerai saambar by Vimala Sethuraman at BetterButter
1599
5
0.0(0)
0

கீரை சாம்பார்

May-20-2016
Vimala Sethuraman
17 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய எலுமிச்சை அளவில் தண்ணீரில் புளி ஊறவைக்கப்பட்டு சாறு பிழிந்தெடுக்கப்பட்டது
  2. பாலக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை இன்னபிற போன்ற எந்தக் கீரையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், நன்றாகக் கழுவி நறுக்கப்பட்டது.
  3. ஒரு தக்காளி, சுவையைக் கூட்டுவதற்கு
  4. 1 1/2 தேக்கரண்டி சாம்பார் பொடி 3/4 தேக்கரண்டி உப்பு
  5. 3/4 கப் பிரஷர் குக்கரில் சமைக்கப்பட்ட பருப்பு, சிறிது மஞ்சள் தூளுடன்.
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  7. கத்திரிக்காய் - 2
  8. முருங்கைக்காய் - 2
  9. நறுக்கப்பட்ட வெங்காயம் - 2
  10. கடுகு - 1/2 தேக்கரண்டி
  11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  12. பெருங்காயம்
  13. கறிவேப்பிலை
  14. கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். 2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். சூடுபடுத்தியதும் வெந்தயம், சீரகம் ஒன்றல்லது இரண்டு துண்டாக்கப்பட்ட மிளகாய், பெருங்காயம், கடுகு ஆகியவற்றை போடவும்.
  2. இப்போது தக்காளி உங்களுக்குப் பிடித்த கீரையைச் சேர்க்கவும். ஒரு நொடி கலக்கி புளி கரைசலை ஊற்றிக்கொள்ளவும். சாம்பார் பொடியையும் உப்பையும் சேர்க்கவும்.
  3. மேலும் கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய் துண்டுகள் சேர்க்கவும். அவையெல்லாம் வேகட்டும், காய்கறி மிருதுவாகட்டும். பிரஷர் குக்கரில் பருப்பைச் சேர்க்கவும். மேலும் 2ல் இருந்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
  4. கடைசியாக கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளைச் சேர்க்கவும். சாதத்தோடு அல்லது தோசை இட்லியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்