வீடு / சமையல் குறிப்பு / வத்தக்குழம்பு

Photo of Vathakozhambu by Mahi Venugopal at BetterButter
1773
10
4.0(0)
0

வத்தக்குழம்பு

May-20-2016
Mahi Venugopal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி - 1 சிறிய ஆரஞ்சி அளவு
  2. மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  3. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  5. வெந்தயத் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. வெல்லம் - 1 கைப்பிடி அளவு
  7. சுண்டைக்காய் த்தல் - 2 கைப்பிடி அளவு
  8. கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி புதியது சுத்தப்படுத்தப்பட்டது
  9. நல்லெண்ணை - 4 தேக்கரண்டி
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
  12. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  13. உளுந்து - 1 தேக்கரண்டி
  14. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
  15. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  16. மிளகு - 1/4 தேக்கரண்டி
  17. சிவப்பு மிளகாய் - 1 எண்ணிக்கை
  18. தேங்காய் துருவல் - 1 கப்

வழிமுறைகள்

  1. புளிச் சாறைத் தயாரிக்கவும். 1/2 டம்ளர் வெந்நீரில் புளியை ஊறவைத்து அரை மணி நேரம் விட்டு வைக்கவும். அடுத்து ஒரு சல்லடையில் ஊற்றி ஒரு முறை வடிக்கட்டுவது போதுமானது. வடிக்கட்டியில் விழுதைப் போட்டு போதுமான அளவு பிழிந்துகொள்ளவும்.
  2. இப்போது ஒரு கடாயைச் சூடுபடுத்தி வெறுமனே வறுத்து, தேங்காய்த் துருவலைத் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிறட்டி வாசனை வந்ததும் அடுப்பை நிறுத்தவும். அதன்பிறகு உடனே துருவப்பட்டத் தேங்காயைச் சேர்த்து ஆறவைக்க எடுத்துவைக்கவும் ... ஆறியதும், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாந்தைத் தயாரித்துக்கொள்ளவும்....
  3. இப்போது ஒரு கடாயை எடுத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் சுண்டைக்காய் வத்தலை அதனுள் போடவும். மிதமான சூட்டில் சில நிமிடங்கள் காத்திருந்து, கருப்பானதும் உடனே அடுப்பை நிறுத்திவிட்டு தயாரித்து வைத்துள்ள புளிச்சாறை ஊற்றிக்கொள்ளவும்.
  4. இப்போது இவற்றோடு அரைத்த சாந்தையும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உயர் தீயில் கொதிக்கவிடவும். இப்போது கலக்கிவிட்டுப் பார்க்கவும். உணவிலிருந்து எண்ணெய் பிரிந்தால், பளபளப்பாக இருக்கும் எண்ணெய் குழம்பில் மிதக்கும்.
  5. வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும், அது கரைட்டும். ஒரு கலக்குக் கலக்கி அடுப்பிலிருந்து இப்போது இறக்கி வெந்தயத் தூள் சேர்த்து மீண்டும் கலக்கி சூடாகப் பரிமாறவும்.
  6. வெள்ளை சாதம், இட்லி, தயிர் சாதத்தோடு அருமையாக இருக்கும்!
  7. எச்சிலூரச் செய்கிறதா! உணவை ருசிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்