வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி

Photo of Hyderabadi mutton dum biryani by Mahima Chandani at BetterButter
5347
48
4.7(0)
0

ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி

May-21-2016
Mahima Chandani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஆந்திரப்ரதேஷ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 250 கிராம் மட்டன்
  2. 250 கிராம் அரிசி. நான் கோலம் அரிசியைப் பயன்படுத்தினேன், சற்றுக் கூடுதலான அரிசியைச் சேர்த்துக்கொண்டேன்.
  3. 1/2 கப் தயிர்
  4. 1/2 கப் புதினா துண்டுகள்
  5. 1/2 கப் கொத்துமல்லி நறுக்கியது
  6. 2 பிரிஞ்சி இலை
  7. 3 நடுத்தர அளவுள்ள வெங்காயம் நறுக்கியது
  8. 1 வெங்காயம் நறுக்கியது அலங்காரத்திற்காக
  9. 1 தேக்கரண்டி ஷாகி இலைகள்
  10. 4-5 கருப்பு மிளகு
  11. 3 கிராம்பு
  12. 2 பச்சை ஏலக்காய்
  13. ஒரு சிட்டிகை குங்குமப்பூ வெந்நீரில் கலந்தது
  14. 2 தேக்கரண்டி வெதுவெதுப்பான பால்
  15. 3-4 பச்சை மிளகாய், காரசாரமாக வேண்டுமானால் நீங்கள் கூடுதலாகச் சேர்க்கலாம்.
  16. 10-12 பூண்டு பற்கள்
  17. இஞ்சி சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. மட்டன் கழுவப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டது. பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை பொறபொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  2. மட்டனில் இந்த சாந்தை தயிர், சிவப்பு மிளகாய், வறுத்து நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ற உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நான் இறைச்சி மசாலா கொஞ்சம் சேர்த்துக்கொண்டேன். 3 தேக்கரண்டி எண்ணெயை இந்த மேரினேட்டில் சேர்த்துக்கொண்டேன்.
  3. மேரினேட் செய்த இறைச்சியை ஒரு மணி நேரத்திற்கு அல்லது கூடுதலாக வைக்கவும். சிறப்பாக வருவதற்கு இரவு முழுவதும் வைப்பது சிறந்தது.
  4. ஏறக்குறைய இரட்டிப்பு அளவு அரிசியை எடுத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாஸ்மதிக்குப் பதிலாக வழக்கமாகக் கோலம் அரிசியைப் பயனப்டுத்த விரும்புவேன்.
  5. ஷாகி சீரகம், பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை இந்தக் கொதிக்கும் நீரில் போடவும்.
  6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சேர்த்து சற்றே எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும், அப்போதுதான் சாம் ஒட்டாது.
  7. அரிசியை 3-4 நிமிடங்கள் கொதிக்கவைத்து, வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  8. ஒரு கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதன்பின்னர் மட்டனை மேரினேட் செய்யவும். சிறு தீயில் வைத்து மூடிபோட்டி மூடி 5-10 நிமிடங்கள் வேகவைக்கவும். மட்டன் இந்த சமயத்தில் தண்ணீரை வெளியேற்றும்.
  9. இதற்குப் பின் வடிக்கட்டிய சாதத்தை இந்தமட்டன் மீது வைக்கவும். சூடானத் தண்ணீரில் கலந்த குங்குமப்பூவைத் தூவவும்.
  10. நறுக்கிய பழுப்பு வெங்காயத்தை சாதத்தின் மீது தூவவும். தவாவை உயர் தீயில் வைக்கவும்.
  11. பிரியாணிப் பானை ஒரு மூடியால் மூடி மாவால் சீல் வைக்கவும். பானை ஒரு ஃபாயிலால் சீல் வைத்து மூடியால் மூடினேன்.
  12. பானை உயர் தீயில் 4-5 நிமிடங்கள் வைத்து அதன்பின்னர் தவாவை சிறு தீயில் 20-25 நிமிடங்கள்.
  13. ஒரு பக்கத்திலிருந்து கொஞ்சம் அரிசியைக் கைகளால் எடுத்துக்கொள்ளவும். அப்போதுதான் சாதம் உடையாது. ரைத்தா அல்லது வெனிகர் வெங்காயத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்