Photo of Rava Upma by Vibha Bhutada at BetterButter
2272
37
4.5(0)
0

ரவா உப்மா

May-22-2016
Vibha Bhutada
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  3. கடலை பருப்பு 1 தேக்கரண்டி
  4. வெங்காநம் 1 நடுத்தர அளவு நறுக்கப்பட்டது
  5. பச்சை மிளகாய் 1 நறுக்கப்பட்டது
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. சீரகம் 1/2 தேக்கரண்டி
  9. இஞ்சி 1 தேக்கரண்டி நறுக்கப்பட்டது
  10. முந்திரிபருப்பு 10-12
  11. சர்க்கரை 1-2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது அல்லது தேவையான அளவு
  12. தண்ணீர் 2-5 கப்
  13. நெய் அல்லது எண்ணெய் 2 தேக்கரண்டி
  14. தேவையான அளவு உப்பு
  15. மல்லி 2 தேக்கரண்டி நறுக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயை அல்லது வானலியைச் சூடுபடுத்தவும். ரவையைச் சேர்த்து வறுக்க ஆரம்பிக்கவும்.
  2. ரவையை வறுக்கும் போது தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும். ரவை வாசனைபெற்று உலர்ந்து, பிரிந்து, மொறுமொறிப்பாக்க் காணப்டும்.
  3. அடுப்பை நிறுத்தி விட்டு வறுத்த ரவையை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  4. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். 1 தேக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
  5. கடுகு பொரியும் சத்தம் கேட்டால் அவை பொரிந்துவிட்டது என்று பொருள்.
  6. இப்போது சீரகத்தை கடலை பருப்பு உளுத்தம்பருப்புடன் சேர்க்கவும். அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  7. உடனடியாக முந்திரி பருப்பு சேர்த்து வறுக்க ஆரம்பிக்கவும். இதற்குள் முந்திரு பருப்பும் பருப்புகளும் பொன்னிறமாக மாறியிருக்கும்.
  8. இப்போது பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பளபளப்பாக மாறும் வரை வதக்கவும்.
  9. அதன்பின் நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், இஞ்சி், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  10. அதன்பிறகு இந்தக் கலவையோடு தண்ணீர் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  11. சர்க்கரை சேர்க்கவும். அது உங்கள் வருப்பம், அதை நீங்கள் தவிர்க்கலாம். உப்மாவில் கொஞ்சமாக இனிப்பு இருப்பதை விரும்புகிறோம், அதனால் சேர்த்தோம். நன்றாகக் கலக்கவும்.
  12. மிதமானச் சூட்டிலிருந்து அதிகமானத் தீயில் தண்ணீரைச் சூடுபடுத்தி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  13. தண்ணீர் கொதிக்கும்போது, தீயை குறைத்துவிடவும்.
  14. அதன்பிறகு ரவாயை 4ல் இருந்து 5 தொகுப்புகளில் கரண்டியைக் கொண்டு சேர்க்கவும். ரவையைச் சேர்த்தபின் உடனே கலக்கவும்.
  15. ரவையின் அடுத்தத் தொகுப்பைச் சேர்க்கவும். இந்த வகையில் கடைசி தொகுப்புவரை ரவைச் சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  16. துரிதமாகக் கிண்டி நன்றாகக் கலந்துகொள்ளவும். ரவை குருணை தண்ணீரை உறிஞ்சும் அதனால் உப்பு நன்றாக வெந்துவிடும்.
  17. மூடிபோட்டு ரவா உப்மாவை 2 நிமிடங்களுக்குச் சிறு தீயில் வேகவைக்கவும்.
  18. அடுப்பை நிறுத்தவும். இதோ ரவா வெந்துவிட்டது, உப்மா தயார்.
  19. கடைசியாக நறுக்கப்பட்டக் கொத்துமல்லியைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  20. உப்மாவை தேங்காய்ச் சட்னி அல்லது எலுமிச்சைத் துண்டுகளோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்