வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சேமியா பாயாசம்

Photo of Chocolate Semiya Payasam by Gouthami Yuvarajan at BetterButter
2996
7
4.0(0)
0

சாக்லேட் சேமியா பாயாசம்

May-24-2016
Gouthami Yuvarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்த சேமியா - 1/3 கப்
  2. கொழுப்பு நிறைந்த பால் - 500 மிலி
  3. முந்திரிபருப்பும் உலர் திராட்சையும் - கொஞ்சம்
  4. சர்க்கரை - 3/4 கப்
  5. கோகோ பவுடர் - 1/2 தேக்கரண்டி
  6. பால் பவுடர் - 1 தேக்கரண்டி
  7. நெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேமியாவை பொன்னிறமாகும்வரை வெறுமனே வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கனமான அடிப்பாகமுள்ள ஒரு பாத்திரத்தில் பாலைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில், கொஞ்சம் நெய்யைச் சூடுபடுத்தி முந்திரி உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்க.
  4. பால் பொங்கி வந்ததும், சேமியாவைச் சேர்த்து வேகும்வரை வேகவைக்கவும்.
  5. சேமியா வெந்ததும், பால், கோகோ பவுடர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. இப்போது சர்க்கரை சேர்த்து அது முற்றிலுமாகக் கரையும் வரை கலக்கவும்.
  7. இறுதியாக முந்திரி உலர் திராட்சைகளைச் சேர்க்கவும்.
  8. அடுப்பை நிறுத்திவிட்டுக. விருப்பத்திற்கேற்ப சூடாகவோ/சில்லென்றோ பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்