வீடு / சமையல் குறிப்பு / திறந்த-பக்கமுள்ள சாண்ட்விச்சுகள்

Photo of Open-faced Sandwiches by Sanjeeta KK at BetterButter
3326
869
4.8(0)
1

திறந்த-பக்கமுள்ள சாண்ட்விச்சுகள்

Aug-14-2015
Sanjeeta KK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3 துண்டுகள் பழுப்பு பிரெட்
  2. 1/2 கப் கடலைமாவு
  3. 1/2 கப் பச்சைக் கடலை முளைகள்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 பெரிய தக்காளி
  7. 1 குடமிளகாய்
  8. கொத்துமல்லியும் புதினா இலைகளும்
  9. 1/2 தேக்கரண்டி மிளகாய் விதைகள்
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1/4 தேக்கரண்டி உப்பு
  12. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  13. தேவையான அளவு தண்ணீர்
  14. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்துமல்லி, புதினா இலைகள், குடமிளகாயைக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தினை எடுத்து, கடலை மாவு, முளைகள், உப்பு, மிளகாய் விதைகள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அனைத்தையும் ஒன்றரக் கலந்துகொள்ளவும்.
  3. பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும், மாவை தண்ணீர் பதத்திற்கு தயாரித்துக்கொள்வதற்காக.
  4. ஒரு கிரிடிலைச் சூடுபடுத்திக்கொள்க அல்லது சாண்ட்விச் டோஸ்டரைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
  5. பிரெட்களைத் துண்டுபோட்டு ஒவ்வொரு துண்டையும் மாவில் தொய்த்தெடுக்கவும்.
  6. ஒவ்வொரு துண்டையும் டோஸ்டரில் வைத்து, மாவிலிருந்து சில காய்கறிகளைக் கரண்டியால் எடுத்து பிரட் துண்டுகளின் மீது வைக்கவும்.
  7. சில துளி எண்ணெய் தெளித்து 2ல் இருந்து 3 நிமிடங்கள் வரை இரு பக்கங்கள் வேகும்வரை வேகவைக்கவும்.
  8. இந்த சுவையான திறந்த-பக்க சாண்ட்விச்சுகளை தக்காளி கெச்சப் அல்லது வீட்டில் தயாரித்தச் சட்டினியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்