Photo of Athirasam by Jayasakthi Ekambaram at BetterButter
671
2
0.0(0)
0

அதிரசம்

Jul-13-2018
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

அரிசிமாவும் வெல்லமும் கலந்து செய்யும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாவு பச்சரிசி ஒரு கப்
  2. பாகு வெல்லம் முக்கால் கப்
  3. ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்
  4. எண்ணெய் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. ஒரு டம்ளர் மாவு பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் நிழலில் அரிசியை காய வைக்க வேண்டும்
  3. தண்ணீர் நன்றாக வடிந்த பிறகு அரை மணி நேரம் கழித்து மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்
  4. வெல்லத்தை நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும்
  5. சுக்கு ஏலக்காய் இரண்டையும் தூள் செய்து கொள்ள வேண்டும்
  6. ஒரு அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் வெல்லத்தை போட வேண்டும்
  7. வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி கொள்ள வேண்டும்
  8. ஒரு அகலமான பாத்திரத்தில் வெல்லத்தை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்
  9. ஒரு பத்து நிமிடம் நன்றாக வெல்லத்தை கொதிக்க விட வேண்டும்
  10. தட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வெல்லப்பாகை அதில் விட்டு பார்க்க வேண்டும்
  11. நன்றாக வெல்லம் உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும்
  12. சுக்கு, ஏலக்காய் தூள் வெல்லப் பாகில் போட வேண்டும்.
  13. அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி நன்றாக கிளற வேண்டும்
  14. உருண்டைகளாக்கி காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  15. இரண்டு பக்கமும் சிவந்த பிறகு எடுத்து இரண்டு கரண்டிகளுக்கு நடுவில் வைத்து எண்ணெய் பிழிய வேண்டும்.
  16. ஒரு ஈரமில்லாத டப்பாவில் ஆறிய பிறகு எடுத்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்