வீடு / சமையல் குறிப்பு / ரஷ்யன் பட்டிஸ்

Photo of Russian Pattice by BetterButter Editorial at BetterButter
3462
80
4.8(0)
0

ரஷ்யன் பட்டிஸ்

Aug-18-2015
BetterButter Editorial
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • பார்சி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 200 கிராம் எலும்பில்லாத கோழிக்கறி
  3. 100 கிராம் துருவிய சீஸ்
  4. 1 டீக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 2 பச்சை மிளாகாய் நறுக்கியது
  6. கொத்தமல்லி இலை நறுக்கியது
  7. உப்பு மற்றும் மிளகுத்தூள் சுவைக்கேற்ப
  8. 2 ரொட்டி துண்டுகள்
  9. 1/2 டீக்கரண்டி கரம் மசாலா தூள்
  10. வறுப்பதற்கு:
  11. 2 முட்டை உடைத்தது
  12. 1 கப் ரவை
  13. எண்ணெய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோழிக்கறியில் இஞ்சி பூண்டு விழுது கலந்து அதில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும்.
  2. வேகவைத்த உருளைக்கிழங்கு ஆறவைத்து தோலுரித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்
  3. கோழிக்கறி வெந்தவுடன் ஆறவைத்து ஒரு பெரிய கிண்ணத்தில் கறியை சிறு துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  4. பின் கோழிக்கறியில் உருளைக்கிழங்கு, சீஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கரம் மசாலா மற்றும் உப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  5. இதில் ரொட்டி துண்டுகளை சேர்த்து மசித்துக் கொண்டு மென்மையான மாவைப் போன்று செய்துக் கொள்ளவும்.
  6. மாவை வட்ட வடிவ பட்டீஸாக செய்து கொள்ளவும், அதை அடித்துவைத்த முட்டையில் மூழ்கவைத்து எடுத்து ரவையை அதன் மேல் பூசிக்கொள்ளவும். இதே முறையில் அனைத்து பட்டீஸ்களையும் செய்துக்கொள்ளவும்.
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்துக் கொண்டு அதை ஆழமாகவோ அல்லது மேலோட்டமாகவோ வறுத்துக் கொள்ளவும்.
  8. சூடாக சட்னி மற்றும் எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்