Photo of Akuri by Sujata Limbu at BetterButter
2289
71
4.6(0)
0

அகுரி

Aug-18-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • பார்சி
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 நன்றாக நறுக்கிய பச்சை மிளகாய்
  2. 1 சிறிய தக்காளி நன்றாக நறுக்கியது (தேவையென்றால்)
  3. 1 நடுத்தர அளவு வெங்காயம் நன்றாக நறுக்கியது
  4. 6 முட்டை
  5. 45 மிலி பால்
  6. 40 கிராம் வெண்ணெய்
  7. 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  9. 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  10. இடித்த மிளகு
  11. 6 வறுத்த ரொட்டி துண்டுகள்
  12. சுவைக்கேற்ப உப்பு
  13. அலங்கரிக்க சில நன்றாக நறுக்கிய கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. வாணலியில் குறைந்த வெப்பத்தில் வெண்ணையை விட்டு சூடுசெய்துக் கொள்ளவும்
  2. அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  3. இதற்க்குக்கிடையில், கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கலந்துக் கொள்ளவும். பின் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் சீரகத்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொள்ளவும். அதை 2-3 நிமிடம் வேகவிடவும்.
  5. வாணலியில் முட்டையை ஊற்றி தொடர்ச்சியாக கலவையை கிளறி விடவும்.
  6. முட்டை கிரீம் போன்று தடிமனாகும் வரை தொடர்ச்சியாக கிளறவும்.
  7. பரிமாறும் தட்டில் 6 வறுத்த ரொட்டி துண்டுகளை வைத்துக் கொள்ளவும். வறுத்த ரொட்டி துண்டுகள் மீது அக்குரியை கவனமாக வைத்துக்கொள்ளவும்.
  8. கொத்தமல்லி இலையைக் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்