வீடு / சமையல் குறிப்பு / GHEE RICE WITH MUTTON CURRY, CHICKEN FRY, KESARI

Photo of GHEE RICE WITH MUTTON CURRY, CHICKEN FRY, KESARI by Munsila Fathima at BetterButter
2080
4
5.0(0)
0

GHEE RICE WITH MUTTON CURRY, CHICKEN FRY, KESARI

Jul-20-2018
Munsila Fathima
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெய் சோறு செய்ய:
  2. சீரக சம்பா அரிசி அரை கிலோ
  3. தண்ணீர் ஒரு கப் அரிசிக்கு 1 1/2அளவு
  4. பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி அளவு
  5. வெங்காயம் 1 1/2
  6. தக்காளி ஒன்று பெரியது
  7. பச்சை மிளகாய் 4
  8. மல்லி இலை, புதினா இலை சிறிதளவு
  9. நெய் 2 1/2 மேசைக்கரண்டி
  10. எண்ணெய் 1- 2 மேஜை கரண்டி அளவு
  11. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  12. உப்பு தேவைக்கு
  13. மட்டன் சால்னா செய்ய:
  14. மட்டன் 300 கிராம்
  15. வெங்காயம் 2
  16. தக்காளி ஒன்று
  17. மிளகாய்-2
  18. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  19. மிளகாய் தூள் ஒன்றரை தேக்கரண்டி
  20. கறி மசாலா 1/4 தேக்கரண்டி
  21. தேங்காய் 2 1/2 துண்டு
  22. பட்டை, கிராம்பு தூள் 1/8 தேக்கரண்டி
  23. உப்பு , எண்ணெய் தேவைக்கு
  24. தயிர் ஒரு மேசைக்கரண்டி
  25. சிக்கன் செய்ய:
  26. சிக்கன் 300 கிராம்
  27. இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை தேக்கரண்டி
  28. உப்பு தேவைக்கு
  29. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  30. சிக்கன் மசாலா 11/2 தேக்கரண்டி
  31. சீரகத்தூள் அரை தேக்கரண்டி
  32. லெமன் சாறு அரை தேக்கரண்டி
  33. கேசரி செய்ய:
  34. ரவை 100 கிராம்
  35. சர்க்கரை 200 கிராம்
  36. தண்ணீர் ஒரு கப் ரவைக்கு 21/2 கப் தண்ணீர்
  37. முந்திரிப்பருப்பு 5-8
  38. ஏலக்காய்-2
  39. கேசரி கலர் சிறிதளவு
  40. நெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. நெய் சோறு செய்ய:
  2. அரிசியை குறைந்தது 25 நிமிடம் ஊற வையுங்க்ள்.
  3. ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. வெங்காயம் நன்கு சிவர தேவை இல்லை ,ஓரளவு சிவந்த பின் இஞ்சி பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு சேர்த்த பின் ஒரு 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும்
  7. தண்ணீரில் மல்லி புதினா இலை, தக்காளி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  8. கொதி வந்ததும் அரிசியை தண்ணீர் வடித்து அதனுடன் சேருங்கள்.
  9. இருபதில் இருந்து இருபத்தி ஐந்து நிமிடத்திற்குள் சாதம் பொங்கிவிடும்
  10. சாதம் அடி பிடிக்காமல் இருக்க சாதம் வெந்து வரும் ஐந்து நிமிடத்திற்கு முன்பு தம் கல்லை போட்டு , ஒரு 7 நிமிடம் தம் போட்டு வையுங்கள்.
  11. தண்ணீர் முழுமையாக வற்றி உள்ளதா என்பதை பார்த்து, 2 தேக்கரண்டி அளவு நெய் சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.
  12. மணமான நெய் சோறு தயார்!
  13. மட்டன் சால்னா செய்ய:
  14. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை கிராம்பு தூள் சேர்க்கவும்.
  15. தூளின் மணம் வந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  16. வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  17. அதனுடன் தக்காளி உப்பு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
  18. தக்காளி நன்கு வதங்கிய பின் மட்டனை சேர்க்கவும்.
  19. மட்டனுடன் கறி மசாலா தூள், புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்
  20. வேக வைக்க தேவையான தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  21. தேங்காயுடன் மூன்றில் இருந்து நான்கு முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
  22. மட்டன் வெந்த பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேங்காய் வாடை போகும் வரை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள்.
  23. இறுதியில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
  24. இவ்வகை சால்னா சாதம், இடியாப்பம், ரொட்டிக்கும் பொருந்தும்
  25. சூப்பரான சுவையான சால்னா ரெடி!
  26. சிக்கன் செய்ய:
  27. சிக்கனுடன் உப்பு மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் மசாலா, லெமன் சாறு, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  28. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் இருபுறமும் பொறித்து( ஷால்லோ ப்ரை) செய்து கொள்ளுங்கள்.
  29. கேசரி செய்ய:
  30. கேசரியை சிம்மில் வைத்து வறுத்து கொள்ளுங்கள்.
  31. வறுப்பு கரிந்து விடவும் கூடாது அதிகம் சிவரவும் கூடாது.
  32. வறுப்பின் இறுதியில் 1/4 - 1/2 தேக்கரண்டி அளவு நெய் சேர்த்து ஒரு முறை பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள்.
  33. மற்றொரு வாணலியில் 11/2 தேக்கரண்டி அளவு நெய் ஊற்றி ஏலக்காய், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  34. சிவந்ததும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  35. தண்ணீரில் தேவையான கேசரி கலர் சேர்க்கவும்
  36. தண்ணீர் கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
  37. இல்லையென்றால் ரவை கட்டி பிடித்து விடும்
  38. ரவை வெந்து வரும் பொழுது மேலே சர்க்கரை சேர்க்கவும்
  39. சர்க்கரை சேர்த்த பின் சிறு நிமிடம் கிளறி விட்ட பின் கிலுகிலுவென்று இருக்கும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்
  40. மேலே ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள்
  41. அடுப்பை அணைத்து சிறிது நேரம் அப்படியே விட்டால் இருகிவிடும்.
  42. இனிப்பான கேசரியும் தயார்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்