Photo of Mutton kulambu by Swarna Vijayakumaar at BetterButter
2221
2
5.0(0)
0

Mutton kulambu

Jul-26-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் - 1/2 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1
  3. சின்ன வெங்காயம் - 15
  4. பூண்டு - 15 பல்
  5. இஞ்சி - பெரிய துண்டு
  6. தக்காளி - 1
  7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி ( காரத்திற்கேற்ப)
  8. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  10. அரைக்க : தேங்காய் 1 கப்+ சோம்பு 1 ஸ்பூன்
  11. தாளிக்க : எண்ணெய் தேவைக்கு
  12. சோம்பு - 1/4 ஸ்பூன்
  13. பட்டை - 2 துண்டு
  14. கிராம்பு - 4
  15. கறிவேப்பிலை - 1 கொத்து

வழிமுறைகள்

  1. கறியை சுத்தமாக கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சிறிது, சின்னவெங்காயம்,உப்பு கொஞ்சம், இஞ்சியை தட்டி சேர்த்து வேக வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி பூண்டு கறிவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. தேங்காயோடு சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்
  4. கறி வெந்ததும் குக்கரை திறந்து மிளகாய்த்தூள், மல்லித்தூள் , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
  5. கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  6. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம், பூண்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழம்பில் சேர்த்து எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும் இறக்கி மல்லிதலை தூவி பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்