வீடு / சமையல் குறிப்பு / இறால் பிரியாணி

Photo of Prawns Biryani by Iffath Saghira at BetterButter
145
0
0.0(0)
0

இறால் பிரியாணி

Jul-29-2018
Iffath Saghira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

இறால் பிரியாணி செய்முறை பற்றி

என் மகனின் விருப்பமான உணவு வகைகளில் ஓன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. இறால் 1கிலோ
  2. பாசுமதி அரிசி 1கிலோ
  3. வெங்காயம் 1/2 கிலோ
  4. தக்காளி 1/4 கிலோ
  5. இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்
  6. எண்ணெய் 100 கிராம்
  7. லவங்கம் பட்டை ஏலக்காய் சிறிது
  8. தயிர்1/2 கப்
  9. எலுமிச்சை பழம் 2
  10. புதினா இலை 1கப்
  11. கொத்தமல்லி தழை 1 கப்
  12. மஞ்சள் தூள் ஓரு சிட்டிகை
  13. மிளகாய் தூள் 3ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. கேசரி பவுடர் ஓரு சிட்டிகை
  16. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓர் அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு சுடானதும் லவங்கம் பட்டை ஏலக்காய் சேரக்கவும்
  2. பிறகு நீளமான நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. நல்ல பொன்னிறமாக வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு இறால் சேர்க்கவும் இரண்டு நிமிடம் வதக்கவும்
  5. பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்த்த நன்றாக வதக்கவும்
  7. உப்பு புதினா இலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேரக்கவும்
  9. நன்றாக மசாலா வதங்கியதும் ஓர் கப் அரிசிக்கு ஓன்றறை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  10. ஓரு மணி நேரம் ஊறிய பாசுமதி அரிசி சேர்க்கவும்
  11. முக்கால் பாகம் வேந்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்
  12. கேசரி பவுடர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி நெய் சேர்த்து பாத்திரம் முடி தம் விடவும் 15 நிமிடம் கழித்து இறக்கவும்
  13. சுடான பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்