வீடு / சமையல் குறிப்பு / கட்டே கா மீத்தா ஆச்சார் - மலை சாத்துக்குடி ஊறுகாய் ( எண்ணெய் இல்லாமல் )

Photo of Katte Ka Meetha Achar - Hill Lime Sweet Pickle (No Oil) by Tikuli Dogra at BetterButter
2297
67
4.0(0)
0

கட்டே கா மீத்தா ஆச்சார் - மலை சாத்துக்குடி ஊறுகாய் ( எண்ணெய் இல்லாமல் )

Jun-07-2016
Tikuli Dogra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஹிமாச்சல
  • ரோசஸ்டிங்
  • மைக்ரோவேவிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாத்துக்குடி- 1 பெரிய அளவு (250 கிராம் வெட்டியது)
  2. உப்பு - 4 தேக்கரண்டி
  3. கருப்பு உப்பு - 1 டீக்கரண்டி
  4. சர்க்கரை - 1 கப்
  5. வெல்லம் - 1/4 கப்
  6. வெந்தயம் - 1/2 டீக்கரண்டி
  7. கடுகு - 1/2 டீக்கரண்டி
  8. கிராம்பு - 5-6
  9. இலவங்கம் பட்டை - 1 அங்குலம்
  10. கருப்பு மிளகு - 8-10
  11. ஓமம் - 1/2 டீக்கரண்டி
  12. மஞ்சள்தூள் - 1 டீக்கரண்டி
  13. சிகப்பு மிளகாய்த்தூள் - 3 டீக்கரண்டி
  14. பெருங்காயம் - 1/4 டீக்கரண்டி

வழிமுறைகள்

  1. சாத்துக்குடியை குழுவி கிட்சன் துண்டால் துடைத்துக் கொள்ளவும், சிறிய துண்டுகளாக வெட்டி மைக்ரோ ஓவனில் பாதுகாப்பான கிண்ணத்தில் வைக்கவும்.
  2. 3-6 நிமிடங்களுக்கு மைக்ரோ ஓவனில் மூடி வைக்கவும். தோல் மென்மையாக ஆகிவிட்டதா என்பதை தெரிய இடையில் நிறுத்தி விட்டு சரி பார்த்துக் கொள்ளவும்.
  3. அதற்க்கு மாறாக, முழு சாத்துக்குடியையும் குக்கரில் வைத்து 3 விசில் விட்டு நிராவியில் வேகவைக்கவும். இதை அதிகமாக வேகவிட வேண்டாம் அல்லது சாத்துக்குடி கூழ்ப் போன்றும் மற்றும் கசப்பு தன்மையாகிவிடும்.
  4. தோல் மென்மையாக ஆனதும் சுலபமாக உரிக்கலாம், சாத்துக்குடியை முழுமையாக ஆறவிடவும்.
  5. ஆறியதும், ஒரு பரந்த கண்ணாடி கிண்ணத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளவும் மற்றும் உப்பு, மிளகாய் தூள், கருப்பு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், சர்க்கரை மற்றும் வெல்லத் தூள் சேர்த்துக் கொள்ளவும் ( சிலர் சர்க்கரை பாகு செய்து, அதைச் சேர்த்துக் கொள்கிறார்கள் ஆனால் நான் சர்க்கரை வைத்து அதை ஒரு நல்ல கலவையை தருகிறேன்)
  6. இப்போது கிராம்பு, இலவங்க பட்டை, கருப்பு மிளகு, கருப்பு ஏலக்காய் விதைகள், ஓமம் நசுக்கியது ஆக்கியவற்றை சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் அவற்றை தூள் தூள்ளாக அரைத்துக் கொள்ளவும். வெந்தயம் மற்றும் கடுகை குறைந்த வெப்பத்தில் நேரடியாக வறுத்துக் கொள்ளவும்.
  7. இதை அதிகமாக வறுத்துவிட்டால் கலவை கசப்பாக மாறிவிடும்.
  8. இந்த மசாலா கலவையை எலுமிச்சை கலவையில் சேர்த்து அதை நன்றாக் கிளறிவிடவும். நீங்கள் வெந்தயம் மற்றும் கடுகை நன்றாக நசுக்கி கொள்ளலாம் அல்லது நான் செய்வதுப் போல் முழுமையாக பயன்படுத்தலாம்.
  9. தேவையான அனைத்து பொருட்களும் சேர்த்த பின்பு, ஊறுகாயை சுவைத்து எதாவது உங்களுக்கு குறைவாக இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை மற்றும் உப்பு சாத்துக்குடியின் சாற்றை சாரை வெளியில் இட செய்யும். இது ஊறுகாய்க்கு நல்ல சுவையும் நல்ல மனத்தையும் பாதுக்காப்பாக இருக்கும் தன்மையும் அளிக்கும்.
  10. சில நாட்கள் கழித்து ஊறுகாய் சிறிது கெட்டியாக மாறும்.
  11. இந்த ஊறுகாயில் ஒரு தேக்கரண்டியை இட்டு, சுத்தமான உலர்ந்த பாத்திரத்தில் போட்டு நன்கு மூடவும். உங்கள் உடனடி ஊறுகாய் பரிமாற தயாராக உள்ளது. நீங்கள் இதை நேரடி சூரிய ஒளியிலும் சில நாட்கள் வைத்திருக்கலாம், ஆனால் இது கட்டாயமானது அல்ல.
  12. இந்த சுவையான ஊறுகாயை தயிர் சாதம், சூடான பரோட்டா, ரொட்டி அல்லது எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்