வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை பேன்கேக்

Photo of Chickpea Pan Cake by Swathi O at BetterButter
305
1
0.0(0)
0

கொண்டைக்கடலை பேன்கேக்

Aug-12-2018
Swathi O
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை பேன்கேக் செய்முறை பற்றி

கொண்டைக்கடலையானது புரதச்சத்து அதிகம் உள்ளதால் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்டு மகிழலாம். குழந்தைகள் கொண்டைக்கடலையை கடித்து உண்ண தயங்குவதால் இப்படி உண்ண விரும்புவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைக்கடலை 100 கிராம்
  2. முட்டை 1
  3. சோள மாவு 1 மேஜை கரண்டி
  4. சமையல் சோடா 1 சிட்டிகை
  5. உப்பு 1 சிட்டிகை
  6. பால் 50 மில்லி
  7. சமையல் எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 6 மணிநேரம் நன்கு ஊர வைக்கும். பிறகு கடலையை 3 விசில் விட்டு எடுத்து தனியாக வைக்கவும். பின்பு அதில் ஒரு முட்டை, ஒரு மேஜை கரண்டி சோள மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, 50 மில்லி பால், ஒரு மேஜை கரண்டி சமையல் எண்ணெய்.
  2. இவை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  3. இந்த மாவு கலவையானது சிறிது கெட்டியாகவே இருக்க வேண்டும்.
  4. மாவை தோசை போல் ஊற்றவும்
  5. இரண்டு பக்கமும் பொன்னிறமாக்கி எடுக்கவும்
  6. மேல் பரப்பில் சிறிதளவு தேன் ஊற்றி பரிமாறவும்
  7. சுவையான கொண்டைக்கடலை பேன்கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்