வீடு / சமையல் குறிப்பு / protein tower-(sprouts, egg, cheese, chenna)

Photo of protein tower-(sprouts, egg, cheese, chenna) by Vani Harvish at BetterButter
350
2
0.0(1)
0

protein tower-(sprouts, egg, cheese, chenna)

Aug-14-2018
Vani Harvish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயிறு - 2ஸ்பூன்
  2. மொச்சை - 2ஸ்பூன்
  3. தட்டை பயறு - 2ஸ்பூன்
  4. சென்னா-2ஸ்பூன்
  5. முட்டை - 3
  6. ப்ரெட் - 6
  7. வெங்காயம் - 2 (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  8. தக்காளி - 1(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  9. கொத்தமல்லி இலை
  10. மிளகு தூள் - 1ஸ்பூன்
  11. உப்பு
  12. மயோனைஸ் சீஸ் - தேவையான அளவு
  13. அலங்கரிக்க :
  14. மெக்சிகன் சாஸ் /ஓரிகனோ / கெட்சப்/செஸ்வான் சாஸ் - பிடித்த சாஸ் பயன்படுத்தி அலங்கரித்து கொள்ளவும்

வழிமுறைகள்

  1. சென்னாவை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  3. பச்சை பயிறு, தட்டை பயறு, மொச்சை, இவற்றை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  4. பிறகு துணியில் கட்டி 12 மணி நேரம் விடவும்
  5. பிறகு அது முளை கட்டி விடும்.
  6. பிறகு அதை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  7. பிறகு அதை மசித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி,உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி வைக்கவும் (வெங்காயம், தக்காளி, வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  8. முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம், மிளகு தூள், உப்பு, சேர்த்து சிறிய ஆம்லெட் செய்து கொள்ளவும்
  9. பிறகு ப்ரெட்டை வட்ட வடிவில் நறுக்கி டோஸ்ட் செய்து கொள்ளவும்
  10. பிறகுஒரு ப்ரெட் வைத்து அதன் மேல் ஆம்லெட் வைத்து அதன் மேல் சென்னா வைக்கவும்
  11. அதன் மேல் ப்ரெட் வைத்து ஸ்பரவுட்ஸ் வைக்கவும்
  12. பிறகு அதன் மேல் ப்ரெட் வைத்து மயோனைஸ் சீஸ் தடவி
  13. அதன் மேல் ஆம்லெட் வைத்து
  14. மறுபடியும் மயோனைஸ் தடவி
  15. அதன் மேல் ப்ரெட் வைத்து பரிமாரவும்
  16. அதை ஓரிகனோ, மெக்சிகன் சாஸ், செஸ்வான் சாஸ் அல்லது கெட்சப் உங்கள் பிடித்த டேஸ்ட்டில் அலங்கரித்து பரிமாரலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Akshara Thambiraj
Aug-15-2018
Akshara Thambiraj   Aug-15-2018

Amazing great looking delicious.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்