வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீரத்து பூரணம் வைத்து உருளைக்கிழங்கு குழம்பு

Photo of Kashmiri stuffed potato curry by Dipika Ranapara at BetterButter
4413
289
4.2(0)
0

காஷ்மீரத்து பூரணம் வைத்து உருளைக்கிழங்கு குழம்பு

Jun-16-2016
Dipika Ranapara
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 7-8 உருளைக்கிழங்கு
  2. காஷ்மீர் சிவப்பு மிளகாய் சாந்து: 1/4 கப் (8-9 காஷ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாய் தண்ணீரில் 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து அதன்பின்ன சாந்தாகத் தயாரிக்கப்பட்டது)
  3. தக்காளி குழம்பு: 4-5 தக்காளி
  4. 2-3 சிறிய அளவிலான வெங்காயம்
  5. 5-6 பச்சை மிளகாய்
  6. 1/2 இன்ச் சிறிய அளவிலான இஞ்சி
  7. 7-8 பூண்டு பற்கள், நசுக்கியது
  8. 1 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
  9. வேர்கடலை சாந்து: 1 கிண்ணம் - 1/2 கிண்ணம் வேர்கடலை+ 1 தேக்கரண்டி கசகசா (தண்ணீரில் 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து, இந்தக் கலவையைச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்)
  10. தேங்காய் சாந்து: 1 கிண்ணம் (1/2 புதிய தேங்காய் + தேங்காய்த் தண்ணீர், மிக்சியில் சற்றே அரைக்கப்பட்டது)
  11. 1 கிண்ணம் புதிய கிரீம்
  12. 1 தேக்கரண்டி நெய் + 1 தேக்கரண்டி எண்ணெய்
  13. 1 மற்றும் 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  14. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி சாந்தை அரைத்து, வெங்காயம், இஞ்சி, மிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றை தக்காளி சாந்தாக அரைத்துககொள்ளவும்.
  2. குங்குமப்பூ மற்றும் வெந்நீர் கலவை. எடுத்து வைக்கவும்.
  3. காஷ்மீர் சிவப்பு மிளகாயை ஊறவைத்து, காஷ்மீர் சிவப்பு மிளகாய்ச் சாந்தை அரைத்துக்கொள்ளவும்.
  4. வேர்கடலையையும் கசகசாவையும் ஊறவைத்த வேர்கடலை சாந்தை அரைத்துக்கொள்ளவும்.
  5. அனைத்துப் பொருள்களையும் தயாராக வைத்துக்கொள்ளவும்.
  6. 7-8 எண்ணிக்கை உருளைக்கிழங்கை எடுத்து ஸ்கூப்பரால் தோலை உரிக்கவும். அவற்றைச் ஸ்கூப் செய்துகொள்ளவும்.
  7. இப்போது 2-3 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வைக்கவும், நாம் ஸ்கூப் செய்த உருளைக்கிழங்கையும் வேகவைக்கவும்.
  8. பூரணத்திற்கு, மீதமுள்ள 1 மற்றும் 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூளையும் மசித்த உருளைக்கிழங்கையும் எடுத்து அதனோடு சுவைக்கேற்றவாறு உப்பு, 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் சாந்து, கொத்துமல்லி, 1 தேக்கரண்டி சமையல் கிங் மசாலா சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  9. இப்போது இந்த பூரணத்தை உருளைக்கிழங்குக் கூடையில் சேர்த்துக்கொள்ளவும்.
  10. ஒரு கடாயை எடுத்து, அதில் எண்ணெயும் செய்யையும் விட்டுச் சூடுபடுத்திக்கொள்க.
  11. அடுத்து தக்காளி சாந்தைச் சேர்த்து எண்ணெய் கடாயில் கசியும்வரை வேகவைக்கவும்.
  12. வேர்கடலைச் சாந்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். கடாயின் பக்கங்களில் எண்ணெய் நீக்கப்படும் வரை சமைக்கவும்.
  13. காஷ்மீர் சிவப்பு மிளகாய்ச் சாந்தைச் சேர்த்து அதை வதக்கிக்கொள்க.
  14. தக்காளி கெச்சப் சேர்த்து அதை வதக்கிக்கொள்ளவும்.
  15. அதை சிம்மில் வைக்கவும். கடாயில் இருந்து விலகும்வரை.
  16. அதன்பின்னர் சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள், சமையல் கிங் மசாலா ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்க.
  17. அடுத்து, புதிய கிரீம் சேர்த்து எண்ணெய் கடாயின் பக்கங்களில் நீக்கப்படும் வரை கலக்கவும்.
  18. தயிர் சேர்த்து வதக்கவும்.
  19. அடுத்து தேங்காய்த் தண்ணீர் சாந்து சேர்த்து வேகவைத்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  20. குங்குமப்பூவைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  21. பூரணம் வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  22. ஒரு பாத்திரத்தில் பரிமாறுவதற்குத் தயார்.
  23. ஒரு முழு சிவப்பு மிளகாயை எடுத்து குறுக்கும் நெடுக்குமாக வெட்டிக்கொள்க. மையத்தில் வைத்து அலங்கரிக்கவும், அது சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்