வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பன்

Photo of Coconut bun by Sumaiya shafi at BetterButter
623
1
0.0(0)
0

தேங்காய் பன்

Sep-09-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பன் செய்முறை பற்றி

தேங்காய் பன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மேற்கு வங்காளம்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 1/2 மூடி துருவியது
  2. மைதா 2 கப்
  3. ஈஸ்ட் 1டீஸ்பூன்
  4. உப்பு 1/4 டீஸ்பூன்
  5. வெண்ணெய் 3 டீஸ்பூன்
  6. பால் 100 மில்லி
  7. சர்க்கரை 3 டீஸ்பூன்+10 டீஸ்பூன்
  8. எண்ணெய் சிறிதளவு
  9. Tutty fruity 50 கிராம்
  10. முந்திரி 30 கிராம்
  11. பாதாம் 30கிராம்
  12. முட்டை 1

வழிமுறைகள்

  1. முதலில் மிதமான சூட்டில் உள்ள பால்லை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.அதை 5 -7நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,வெண்ணெய் சேர்த்து பால் கலவையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. அதை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. இந்த நேரத்தில் ஒரு பௌலில் தேங்காய் ,சர்க்கரை, முந்திரி,பாதாம் மற்றும் tutty fruity சேர்த்து கிளறி கொள்ளவும்.
  5. 2மணி நேரம் கழித்து மைதா மாவை 4 உருண்டையாக பிரித்து கொள்ளவும்.
  6. ஒரு உருண்ட யை தட்டி அதில் தேங்காய் அடைக்கத்தை வைத்து வேறு ஒரு உருண்டை தட்டி அதன் மேல் முடவும்.
  7. ஒரு முட்டையை அடித்து அதன் மேல் தடவி விடவும்.
  8. ப்ரீ ஹீட் செய்த oven லில் 30-40நிமிடம் வரம் 250degree யில் வைக்கவும்.
  9. சுவையான தேங்காய் பன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்