வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய வெஜ் டின்னர் பார்ட்டி

Photo of small grains veg dinner party by Vani Harvish at BetterButter
919
0
0.0(0)
0

சிறுதானிய வெஜ் டின்னர் பார்ட்டி

Sep-24-2018
Vani Harvish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
150 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய வெஜ் டின்னர் பார்ட்டி செய்முறை பற்றி

சிறுதானியங்கள் வைத்து செய்த ரொட்டி, தோசை, மற்றும் பேபிகார்ன் 65, பன்னீர் சப்ஜி, தால், சாம்பார், சட்னி, பொரித்த கார்ன்,.

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோள மாவு - 1கப்
  2. கம்பு மாவு -1 கப்
  3. கோதுமை மாவு - 2கப்
  4. அரிசி மாவு - 1/2 கப்
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு
  7. பேபிகார்ன் - 10
  8. சிக்கன் 65 மசாலா பொடி - 2ஸ்பூன்
  9. பன்னீர் - 250 கிராம்
  10. வெங்காயம் - 4
  11. தக்காளி - 5
  12. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  13. தேங்காய் பால் - 1கப்
  14. மல்லி பொடி - 1ஸ்பூன்
  15. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்
  16. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  17. தேங்காய் துறுவல் - 1/2 கப்
  18. புளி - சிறிதளவு
  19. மிளகாய் - 2
  20. பூண்டு - 4பல்
  21. பாசிப் பருப்பு - 1/2 கப்
  22. துவரம் பருப்பு - 1/2 கப்
  23. கேரட் - 1
  24. உருளைக்கிழங்கு - 1
  25. கடுகு - 2ஸ்பூன்
  26. உளுத்தம் பருப்பு - 2ஸ்பூன்
  27. கறிவேப்பிலை
  28. சீரகம் - 1ஸ்பூன்
  29. சாம்பார் பொடி - 1ஸ்பூன்
  30. தயிர் - 1கப்
  31. சாதம் - 2கப்
  32. சோள முத்துகள்-1/2 கப்

வழிமுறைகள்

  1. சோள மாவு, கோதுமை மாவு, கம்பு மாவு உப்பு அரிசி மாவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு அதை தோசை சுட்டு எடுக்கவும்
  4. சோள மாவு, கோதுமை மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. பிறகு அதை ரொட்டி தட்டி
  6. தோசை கல்லில் தண்ணீர் தடவி அதை பரப்பி கல்லை திருப்பி நெருப்பில் வாட்டி எடுத்தது கொள்ளவும்.
  7. பேபி கார்ன், சிக்கன் 65மசாலா பொடி உப்பு சேர்த்துக் தண்ணீர் தெளித்து கிளறி வைக்கவும்
  8. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  9. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
  10. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி உப்பு சேர்த்துக் வதக்கி
  11. பிறகு பன்னீர் சேர்த்து வதக்கவும்
  12. தேங்காய் பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்
  13. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு புளி உப்பு
  14. சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  15. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்
  16. குக்கரில் வெங்காயம், தக்காளி, மிளகாய், உப்பு, பாசிப் பருப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  17. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து
  18. அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதித்தவுடன் இறக்கவும்
  19. குக்கரில் வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கை துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து
  20. வேக விடவும் பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  21. வேக வைத்த பருப்பை சேர்த்து சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்
  22. சோள முத்துகளை பொரித்து எடுக்கவும் பின்னர் அதனுடன் மிளகாய் வற்றல் பொடி உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  23. சாத்துடன் தயிர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  24. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை, மிளகாய், சேர்த்து தாளித்து அதனுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்