வீடு / சமையல் குறிப்பு / SALEM THATTU VADAI SET ! THATTU VADAI SANDWICH !

Photo of SALEM THATTU VADAI SET ! THATTU VADAI SANDWICH ! by Ramani Thiagarajan at BetterButter
2521
4
0.0(2)
0

SALEM THATTU VADAI SET ! THATTU VADAI SANDWICH !

Oct-04-2018
Ramani Thiagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு -1 கப்
  2. பொட்டுக்கடலை மாவு -3 மேஜைக் கரண்டி
  3. வறுத்து அரைத்த உளுத்தம்பருப்பு மாவு -2மேஜைக்கரண்டி
  4. வெண்ணெய் - 2மேஜைக்கரண்டி
  5. எண்ணெய் 1/2 லிட்டர்
  6. உப்பு - 3 தேக்கரண்டி
  7. பொதினா -ஒரு கட்டு
  8. கொத்துமல்லி இலை - ஒரு கட்டு
  9. தக்காளி - 3
  10. சிறிய வெங்காயம் - 20
  11. பச்சை மிளகாய் - 6
  12. காய்ந்த மிளகாய் - 6
  13. எலுமிச்சம் பழம் - 1
  14. தயாரித்த தட்டை முறுக்குகள்
  15. எள்ளு - 3 தேக்கரண்டி
  16. நிலக்கடலை -2 தேக்கரண்டி
  17. பெருங்காயத்தூள் -1 தேக்கரண்டி
  18. பூண்டு பச்சை மிளகாய் அரைத்தது -2 தேக்கரண்டி
  19. கேரட் துருவியது - ஒரு கப்
  20. பீட்ரூட் துருவியது - ஒரு கப்
  21. பெரிய வெங்காயம் வெட்டியது - ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு ,உளுத்தம்பருப்பு மாவு,பூண்டு பச்சைமிளகாய் அரைத்த விழுது சேர்த்து சூடான உருக்கிய வெண்ணெயை அதன் மேல் ஊற்றவும்.
  2. உப்பு சேர்த்த வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
  3. பிசைந்த மாவுடன் எள்,லேசாக இடித்த நிலக்கடலை சேர்த்து பிசையவும்.
  4. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பிளாஶ்டிக் பேப்பரின் மேல் வைக்கவும்.
  5. அதன் மேல் மற்றொரு பேப்பரை வைத்து ஒரு கிண்ணத்தால் அழுத்தி தட்டு வடைகளாக தட்டிக் கொள்ளவும்.
  6. எண்ணெயில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
  7. இது போல் சிகப்பு சட்னி,பச்சை சட்டினி தயாரிக்க வேண்டும்.
  8. சிகப்பு சட்னிக்கு தக்காளி,சிகப்பு மிளகாய்,சிறிய வெங்காயம் எடுத்துக்கொள்ளவும்.
  9. எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
  10. வதக்கியவைகளை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  11. பொதினா,சிறிய வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  12. கேரட்டை துருவிக் கொள்ளவும் .
  13. பீட்ரூட்டைத் துருவிக் கொள்ளவும்.
  14. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  15. இது போல் தயாரித்து வைத்துக் கொள்ளவும்
  16. ஒரு தட்டுவடை மேல் பச்சை சட்னியை தடவி அதன் மேல் பீட்ரூட் துருவல்,கேரட் துருவல்,வெட்டிய வெங்காயம்,சிகப்பு சட்னி சேர்க்கவும்.
  17. அதன் மேல் சிகப்பு சட்டினி தடவிய மற்றொரு தட்டையை வைக்கவும்.
  18. சுவை மிகுந்த மிகவும் பிரசித்திப் பெற்ற தட்டுவடை செட் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Thiagarajan Kumaraswami
Oct-04-2018
Thiagarajan Kumaraswami   Oct-04-2018

இது மிகவும் சுவையான உணவு ஆகும்.குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு ஆகும்.

Ramani Thiagarajan
Oct-04-2018
Ramani Thiagarajan   Oct-04-2018

சேலம் பிரசித்தி பெற்ற தட்டுவடை செட் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும்.பீட்ரூட்,கேரட்,பொதினா,பச்சைக் கொத்துமல்லி,தக்காளி,எள்,நிலக்கடலை,பொட்டுக்கடலை போன்ற சத்து மிகுந்த பொருட்கள் சேர்ந்த சுவையான உணவு ஆகும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்