வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை ரசம்

Photo of Paruppu Urandai Rasam by Neeru Srikanth at BetterButter
943
3
0.0(0)
0

பருப்பு உருண்டை ரசம்

Jul-06-2016
Neeru Srikanth
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 1/2 கப்
  2. கடலை பருப்பு 1/2 கப்
  3. காய்ந்த மிளகாய் 3
  4. கறிவேப்பிலை ஒரு பெரிய கொத்து
  5. பெருங்காயம் தாராளமான சிட்டிகை
  6. புளி எலுமிச்சை அளவு
  7. தண்ணீர் 3 கப்
  8. மஞ்சள் தூள் 1/3 கப்
  9. ரசப் பொடி 3 தேக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி
  12. கொத்துமல்லி ஒரு சிறிய கொத்து
  13. நெய் 2 தேக்கரண்டி
  14. கடுகு 1 தேக்கரண்டி
  15. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. அவற்றை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. ஒரு மிக்சியில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்து அரைத்துக்கொள்ளவும்.
  4. பருப்பை மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  5. மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து அவற்றை அரைத்துக்கொள்ளவும், அப்போதுதான் நன்றாகக் கலந்துவிடும்.
  6. உருண்டையாகவோ ஓவலாகவோ அவற்றைத் தளர்வாகத் தயாரித்துக்கொள்ளவும். உருண்டைகளாகச் செய்யும்போது தளர்வாகச் செய்துகொள்ளவும். அதிகம் அழுத்தவேண்டாம்.
  7. பிரஷர் குக்கரில் 4 விசில்களுக்கு வேகவைக்கவும்
  8. பிரஷரில் இருந்து எடுத்து சூடாக எடுத்து வைக்கவும்.
  9. தண்ணீரில் அடித்த புளியில் இருந்து சாறைப் பிழிந்துகொள்ளவும்.
  10. புளி, ரசப்பொடி, உப்பு ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்து புளியின் பச்சை வாடை போகும் வரை 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  11. கொதிக்கும்போது உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு 10-15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  12. அடுப்பை நிறுத்திவிட்டு கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்