வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கொத்சு

Photo of Brinjal Gotsu by Neeru Srikanth at BetterButter
1782
87
4.0(0)
0

கத்தரிக்காய் கொத்சு

Jul-06-2016
Neeru Srikanth
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் 3
  2. புளி 2 எலுமிச்சை அளவு
  3. பச்சை மிளகாய் 4
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. தண்ணீர் 500 மிலி
  6. கடுகு – ¼ தேக்கரண்டி
  7. கடலை பருப்பு – ½ தேக்கரண்டி
  8. உளுந்து – ½ தேக்கரண்டி
  9. நல்லெண்ணெய் –2 தேக்கரண்டி
  10. உப்பு – சுவைக்கு
  11. பெருங்காயம் - தாராளமான ஒரு சிட்டிகை
  12. கொத்துமல்லி - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயைக் கழுவி எண்ணெயில் தோய்த்துக்கொள்ளவும்.
  2. கத்தரிக்காயை கேஸ் தீயில் வறுத்து எல்லாப்பக்கமும் வேகும் வரையில் திருப்பவும்.
  3. ஆறட்டும்.
  4. தோலை உரித்து கத்தரிக்காயை மசித்துக்கொள்க.
  5. புளியை தண்ணீரில் அடித்து 500 மிலி தண்ணீரில் சாறாகத் தயாரித்துக்கொள்ளவும். இப்போது எல்லா பொருள்களும் சமைப்பதற்குத் தயார்.
  6. ஒரு கடாயினை எடுத்து எண்ணெய், பெருங்காயம் சேர்க்கவும்.
  7. கடுகு, கடலை பருப்பு, உளுந்து சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
  8. இஞ்சி சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  9. பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்க.
  10. அடுப்பை நிறுத்தவும்.
  11. புளிச்சாறைச் சேர்க்கவும்.
  12. வறுத்து மசிக்கப்பட்ட கத்தரிக்காயைச் சேர்க்கவும்.
  13. உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
  14. கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்