வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கடையல்

Photo of Ridge gourd kadayal by Krishnasamy Vidya Valli at BetterButter
314
1
0.0(0)
0

பீர்க்கங்காய் கடையல்

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கடையல் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் சத்தான இந்தக் கடையல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பீர்க்கங்காய் நறுக்கியது அரை கப்
  2. தக்காளி ஒன்று
  3. புளிக் கரைசல் 1 தேக்கரண்டி
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  7. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  8. அப்படியே அரைக்க தேவையானவை
  9. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  10. மிளகாய்வற்றல் 1 அல்லது 2
  11. சீரகம் கால் தேக்கரண்டி
  12. தாளிக்க தேவையானவை
  13. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  15. பெருங்காயம் 2 சிட்டிகை
  16. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தக்காளி மஞ்சள் பொடி உப்பு புளிக் கரைசல் வெல்லம் சேர்த்து குக்கரில் 2 அல்லது 3 விசில் வைத்து எடுக்கவும்
  2. பொட்டேட்டோ மேஷர் அல்லது மத்து உதவியால் நன்றாக கடைந்து கொள்ளவும்
  3. அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  4. அரைக்க கொடுத்தவற்றை அரைத்து சேர்க்கவும்
  5. கெட்டியானவுடன் இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்
  6. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்