வீடு / சமையல் குறிப்பு / கேரளத்து முட்டை ரோஸ்ட்

Photo of Kerala Egg Roast by Jaya Rajesh at BetterButter
1261
44
4.5(0)
0

கேரளத்து முட்டை ரோஸ்ட்

Jul-07-2016
Jaya Rajesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 வேகவைத்தக் கடின முட்டைகள்
  2. 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  3. 1 கொத்து கறிவேப்பிலை
  4. 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. 2 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
  6. 6 பூண்டு பற்கள் நசுக்கியது
  7. 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  8. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் தோங்காய் எண்ணெயைச் சூடுபடுத்திப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை அதை வதக்கிக்கொள்ளவும்.
  2. அதன்பின்ன பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது மிருதுவாகி எண்ணெய் கசியுமவரை வதக்கவும்.
  3. அடுத்து மசாலாப் பொடிகளையும் சேர்வைப்பொருள் பட்டியலில் குறிப்பிட்டபடி உப்பையும் சேர்க்கவும்.
  4. மசாலாவின் பச்சைவாடை போகும்வரை மீண்டும் வதக்கவும். சிறிது தண்ணீரைச் சேர்த்து கடாயை மூடி வேகவைக்கவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி சமைக்கவும். மசாலா வெந்ததும் மேலே எண்ணெய் மிதப்பதை நீங்கள் பார்க்கலாம்.
  6. இந்த நிலையில் வேகவைத்த கடின முட்டையைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாக பூசவும். ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  7. பரந்தா அல்லது ஆப்பத்தோடுச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்