வீடு / சமையல் குறிப்பு / கடிகார ரசம் - ஒரு தமிழ்நாட்டு ரசம்

Photo of Kadigara Rasam - A South Tamil Nadu Rasam by Devi Bala Chandrasekar at BetterButter
1585
19
0.0(0)
0

கடிகார ரசம் - ஒரு தமிழ்நாட்டு ரசம்

Jul-08-2016
Devi Bala Chandrasekar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி - 1 பெரிய அளவு
  2. அரிசி கழுவியத் தண்ணீர் - 2 கப்
  3. புளி கரைசல் - 1 கப்
  4. பச்சை மிளகாய் - 2 பிளந்தது
  5. மிளகு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 2 தேக்கரண்டி
  7. பூண்டு - 3 பற்கள்
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் - பாதி தேக்கரண்டி
  12. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  13. கொத்துமல்லியும் கறிவேப்பிலையும் அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சமைக்கத்திட்டமிட்டுள்ள அரிசியைத் தண்ணீர் கழுவி வடிக்கட்டிக்கொள்ளவும். அரிசியோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து அரிசியைத் தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் சேகரித்து, எடுத்து வைக்கவும்.
  2. கைமுறையாகப் பொடித்துக்கொண்ட மிளகு, சீரகம், பூண்டு. கிராம்புகளை ஒரு குழவியில் சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொண்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கப் புளிக் கரைசலை ஒரு பாத்திரத்தில் எடுத்து தக்காளி சேர்த்து கைகளால் மசித்து, மஞ்சள் தூள், உப்பு, பிளந்த பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து கைமுறையாகக் கலவையை இடித்துப் பொடித்துக்கொள்ளவும்.
  4. இந்தக் கலவையை இரண்டு கப் கழுவிப்பட்டத் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு ரசக் கலவையைச் சேர்த்து மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.
  6. அது கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை நிறுத்துவிட்டு நறுக்கப்பட்ட கொத்துமல்லி கறிவேப்பிலையால் அலங்கரித்துக்கொள்ளவும்.
  7. ஆவி பறக்கும் சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்