வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை லட்டு

Photo of Maaladu / Pottukadalai Ladoo / Roasted Gram Ladoo by Subashini Murali at BetterButter
4195
11
5.0(0)
0

பொட்டுக்கடலை லட்டு

Jul-08-2016
Subashini Murali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் பொட்டுக்கடலை
  2. 3/4 கப் சர்க்கரை
  3. 1/4 கப் + 1 தேக்கரண்டி வெண்ணெய்/நெய்
  4. 2 ஏலக்காய்
  5. 6 முந்திரிபருப்பு

வழிமுறைகள்

  1. சிறு தீயில் பொட்டுக்கடலையை வெறுமனே 2-3 நிமிடங்கள் வறுத்து ஆறவிடவும். அதிகம் வறுக்கவேண்டாம்.
  2. ஒரு மிக்சரில் பொடியாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.
  3. சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடிசெய்து சலித்துக்கொள்ளவும்.
  4. முந்திரிபருப்புகளை நறுக்கி கொஞ்சம் நெய்விட்டு வறுத்துக்கொள்ளவும்.
  5. ஒரு அகலமான பாத்திரத்தில் அல்லது தட்டில் சலித்த கடலை மாவு, சர்க்கரை, வறுத்த முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
  6. நெய்யைச் சூடுபடுத்தி ஒரு மாவுக் கலவையில் ஊற்றி கரண்டியால் கலக்கிக்கொள்ளவும்.
  7. சூடாக இருக்கும்போதே லட்டு (சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக) பிடித்து ஒரு தட்டில் அடுக்கிக்கொள்ளவும்.
  8. ஆறியதும் காற்றுப் புகாதப் பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்