வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தோசை

Photo of Ridge gourd dosa by Rachell Revathi Samuel at BetterButter
776
1
0.0(0)
0

பீர்க்கங்காய் தோசை

Oct-23-2018
Rachell Revathi Samuel
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தோசை செய்முறை பற்றி

பீர்க்கங்காய் சேர்த்து அரைத்து செய்யப்படும் தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/2 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. பீர்க்கங்காய் 1 சிறியது
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் துவரம் பருப்பை கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்த அரிசி துவரம் பருப்புடன் தோல் நீக்கிய பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. மிக்ஸியில் அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  6. சுவையான ஆரோக்கியமான பீர்க்கங்காய் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்