வீடு / சமையல் குறிப்பு / பட்டர் முறுக்கு

Photo of Butter murukku by Juvaireya R at BetterButter
371
3
0.0(0)
0

பட்டர் முறுக்கு

Oct-27-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பட்டர் முறுக்கு செய்முறை பற்றி

தீபாவளி பலகாராத்தில் முதல் இடத்தை பிடிப்பது முறுக்கு .

செய்முறை டாக்ஸ்

  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஒரு கப் அரிசி மாவு
  2. அரை கப் பொட்டுக்கடலை மாவு
  3. மூன்று தேக்கரண்டி வெண்ணெய் / நெய்
  4. சிறிதளவு பெருங்காயத்தூள்
  5. தேவையான அளவு உப்பு
  6. ஒரு கரண்டி சூடான எண்ணெய்
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. பின் அதில் வெண்ணை மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. பின் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  4. பின் கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாகக் சூடேற்றவும்
  5. முறுக்கு பிழியும் குழலில் நட்சத்திர அச்சை பயன்படுத்தி மாவை நன்றாக அடைத்துக் கொள்ளவும்
  6. எண்ணெய் சூடு ஏறியதும் கவனமாக முறுக்கு மாவை எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்
  7. முறுக்கு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு நன்றாக வேக விடவும்
  8. முறுக்கு வெந்ததும் எண்ணெயை நன்றாக வடித்து தட்டிற்கு மாற்றவும்
  9. இதேபோல் அனைத்து முறைகளையும் சுட்டு எடுக்கவும்
  10. கரண்டியின் பின்புறம் முறுக்கு மாவை பிழிந்து விட்டு அப்படியும் முறுக்கை பிழிந்தெடுக்கலாம்.
  11. வாயில் போட்டவுடன் கரையும் பட்டர் முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்