வீடு / சமையல் குறிப்பு / நெய் மைசூர் பா

Photo of Ghee mysore pak by Adaikkammai Annamalai at BetterButter
375
3
0.0(0)
0

நெய் மைசூர் பா

Oct-31-2018
Adaikkammai Annamalai
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெய் மைசூர் பா செய்முறை பற்றி

இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் மைசூர் பா என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம். பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன.. இதை வீட்டிலே எப்படி சுலபமாக செய்யலாம் என பார்க்கலாம் மைசூர் பா செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல மற்ற இனிப்பு பண்டங்களை போல் நினைத்த உடன் செய்து விட முடியாது. இதை முயற்சித்தவர்களுக்கு தான் தெரியும். என்னெனில் பாகு சரியான பதம் எடுத்தால் மட்டுமே அதன் ருசியை முழுவதுமாக பெற முடியும். கொஞ்சம் பாகு பதம் வருவதற்குள் எடுத்துவிட்டால் மைசூர் பா அல்வா போல் இருக்கும். கொஞ்சம் பாகு பதம் கூடி எடுத்து விட்டால் கல் போல் மாறி விடும் உடைக்க கூட முடியாது. இதனால் தான் பலரும் இதை முயற்சிக்க கூட பயப்புடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை மாவு - 2 கப்
  2. சர்க்கரை - 4 கப்
  3. பால் பவுடர் - 3 கப்
  4. நெய் - 1/2 kg
  5. பால் - 1 கப்
  6. கலர் - சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும், நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்
  2. முதலில் சர்க்கரையை பாலுடன் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
  3. சர்க்கரை கரைந்து பாகு பதம் வந்த பின் பால் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லமால் கிளறி பின் வறுத்த கடலை மாவு சேர்த்து கட்டி படாமல் கிளறவும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து
  4. மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.
  5. கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.
  6. நன்கு ஆறியதும் கத்தியால் கீறி பாகம் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.
  7. சுவையான மைசூர் பா தயார் எளிய முறையில்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்