வீடு / சமையல் குறிப்பு / உளுத்தங்களி

Photo of Uzhundhu kali / urad dal halwa by Subashini Murali at BetterButter
8005
9
4.3(0)
0

உளுத்தங்களி

Jul-13-2016
Subashini Murali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் வெள்ளை உளுந்து
  2. 2 தேக்கரண்டி அரிசி
  3. 2 கப் பனை வெல்லத் தூள்
  4. 3 கப் தண்ணீர்
  5. 1/4 கப் நல்லெண்ணெய்
  6. 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  7. 10 முந்திரி பருப்பு (வறுத்தது)

வழிமுறைகள்

  1. வெள்ளை உளுந்தை நீங்கள் வாசனையை உணரும்வரை வேறெதுவும் சேர்க்காமல் வறுக்கவும்.
  2. ஆறியதும் உளுந்து அரிசியை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் பொடியாக்கப்பட்ட வெல்லம், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை தண்ணீரோடு சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டிக்கொள்ளவும்.
  4. ஒரு நான் ஸ்டிக் அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் வெல்லத் தண்ணீரை ஊற்றி கொதி நிலைக்கு வரவிடவும்.
  5. அரைத்த மாவைச்சேர்த்து கட்டி சேராமல் இருக்க தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். (மிதமானச் சூட்டில் வைக்கவும்)
  6. அடர்த்தியானதும், நல்லெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும் (உங்களுக்கு தேவையென்றால் நெய்யைக் கூட இதற்குப் பதிலாகச் சேர்த்துக்கொள்ளலாம்).
  7. கடாயின் பக்கங்களிலிருந்து விடுபடும்வரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்து வறுத்த முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கவும்.
  8. லட்டு போல் செய்துகொண்டு பாத்திரங்களில் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்