Photo of Wheat Halwa by Nirmala Sundari at BetterButter
715
1
0.0(1)
0

Wheat Halwa

Nov-07-2018
Nirmala Sundari
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2 கப்
  2. சர்க்கரை 1 1/4 கப்
  3. நெய் 1/2 கப்
  4. ஏலக்காய் பொடி 1/4 மேஜைக்கரண்டி
  5. உடைத்த முந்திரி பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. தண்ணீர் 3 ௧ப்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை 1/4 கப் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  2. பின்பு அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய பிறகு, அந்த தண்ணீரிலே, மாவை நன்கு கறைக்கவும்.
  4. இதை ஒரு அடி கணமான பாத்திரத்தில் வடிகட்டவும்.
  5. குறைந்த தீயில், கஞ்சி பதம் வரும் வரை கிண்டவும்.
  6. பின்பு 1கப் சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிண்டவும்.
  7. குறைந்த தீயில் விடாமல் கிண்ட வேண்டும்.
  8. ஏற்கனவே ஊற்றிய நெய் அல்வாவில் நன்கு கலந்து உள்ளே சென்றவுடன், அடுத்த 2 மேஜைக்கரண்டி நெய் விடவும்.
  9. இதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்க்கவும்.
  10. இன்னொரு பாத்திரத்தில், 1/4 கப் சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இந்த சர்க்கரை கராமல்(காப்பி நிறம்) ஆக வேண்டும்.
  11. அல்வாவிற்கு நிறம் கொடுப்பதற்கு, அந்த கராமல் சர்கரையை அல்வாவில் சேர்க்கவும். நன்கு கிளறவும்.
  12. முந்திரி மற்றும் ஏலம் பொடி சேர்க்கவும்.
  13. சிறிது சிறிதாக நெய் சேர்க்கும் போது, நெய் உள்ளே செல்லாமல் மிதக்கும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
khaja muhaideen
Sep-24-2019
khaja muhaideen   Sep-24-2019

அருமையான டிஷ்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்