வீடு / சமையல் குறிப்பு / மசாலா சாம்பார்

Photo of Masala Sambar by Sudha Sridhar at BetterButter
3486
15
0.0(0)
0

மசாலா சாம்பார்

Jul-17-2016
Sudha Sridhar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் - 12/15
  2. காளிபிளவர் - 3-4 பூ
  3. வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 (துண்டு துண்டாக நறுக்கப்பட்டது)
  4. வாழைக்காய் - 1 (நறுக்கப்பட்டது)
  5. புளி விழுது - 1/2 -3/4 கப் (உங்கள் துவர்ப்புச் சுவை தேவைக்கேற்ப)
  6. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  7. இலவங்கப்பட்டை - 1/2 இன்ச்
  8. கசகசா - 1/2 தேக்கரண்டி
  9. கருப்பு ஏலக்காய் - 1
  10. மல்லி - 1 தேக்கரண்டி
  11. உடைத்த கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  12. காய்ந்த சிவப்பு மிளகாய் - 4- 6
  13. புதிய தேங்காய் - 2-3 தேக்கரண்டி
  14. வறுத்த உடைத்த கொண்டைக்கடலை
  15. வெங்காயம் - 1/2 நறுக்கப்பட்டது (சாசுக்கு)
  16. கடுகு - 1 தேக்கரண்டி
  17. கறிவேப்பிலை - கொஞ்சம்
  18. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  19. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  20. எண்ணெய் - 3-4 தேக்கரண்டி
  21. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கசகசா, கருப்பு ஏலக்காய் ஆகியவற்றை வேறு எதுவும் சேர்க்காமல் சற்றே வறுப்படும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  2. 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் எடுத்து மல்லி, பிளந்த கொண்டைக்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. காளிபிளவரையும் வாழைக்காயையும் ஒரு மைக்ரோ ஓவனில் உயர் வெப்பத்தில் கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்கு அரைவேக்காடு கொடுக்கவும்.
  4. ஒரு கனமான அடிப்பாகம் உள்ள ஒரு கடாயை எடுத்து 2-3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்கக் காத்திருக்கவும். கறிவேப்பிலை சின்னவெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. புளி விழுது, பெருங்காயம், மஞ்சள் தூள் கொஞ்சம தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை 5-7 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  6. இதற்கிடையில் அனைத்துப் பொருள்களையும் பச்சை வெங்காயம், தேங்காய், மற்றும் சட்னி பருப்போடு சேர்த்து மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  7. அரைவேக்காட்டுக் காய்கறிகளையும் அரைத்த மசாலா சாந்தையும் சேர்த்து தண்ணீரைக் கொண்டு பதத்தினை சரிபார்த்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  8. சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்