வீடு / சமையல் குறிப்பு / காய்கறி கலவை ஓட்ஸ் ரவா கிச்சடி

Photo of Mixed vegetable oats rava khichdi by Saranya Sridharan at BetterButter
1604
6
0.0(0)
0

காய்கறி கலவை ஓட்ஸ் ரவா கிச்சடி

Jul-17-2016
Saranya Sridharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1/2 கப்
  2. ஓட்ஸ் - 1/2 கப்
  3. காய்கறி கலவை (கேரட், பட்டாணி, குடமிளாகாய், பீன்ஸ்) - 1/2 கப்
  4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு - பொடியாக நறுக்கப்பட்டது
  5. தக்காளி - 1, பொடியாக நறுக்கப்பட்டது
  6. பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கப்பட்டது
  7. இஞ்சி - பொடியாக நறுக்கப்பட்டது - 2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - 5-6
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1தேக்கரண்டி
  11. கல் உப்பு - சுவைக்கு
  12. எண்ணெய்- தாளிப்புக்கு
  13. நெய் - 1 தேக்கரண்டி
  14. தண்ணீர் - 2 கப், 1 கப் (ஓட்ஸ் + ரவை)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில், எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
  2. கடுகு பொரிய ஆரம்பித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
  3. நறுக்கப்பட்ட வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  4. தக்காளியையும் மற்ற காய்கறிகளையும் சேர்த்து நன்றாக 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  5. தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும். ஓட்ஸ் + ரவா கலவையை தொடர்ந்து கலக்கும்போது சேர்க்கவும்.
  7. நெய் சேர்த்து கலந்துகொள்ளவும். கடாயை ஒரு மூடியால் மூடி சிறுதீயில் ரவை வேகும்வரை விடவும்.
  8. நன்றாகக் கலந்து தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்