வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு கோசம்பரி

Photo of Green gram kosambari / salad by Chitra Purushothaman at BetterButter
507
0
5.0(0)
0

பாசிப்பருப்பு கோசம்பரி

Dec-19-2018
Chitra Purushothaman
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு கோசம்பரி செய்முறை பற்றி

பாசிப்பருப்பின் புரதமும், வெள்ளரியின் நற்குணமும் நிறைந்த சத்துப்பொருள்

செய்முறை டாக்ஸ்

  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு ½ கப் கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. தோல் நீக்கி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் 1 கப்
  3. துருவிய தேங்காய் ¼ கப்
  4. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  5. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 1 தேக்கரண்டி
  9. கடுகு ¼ தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை சில
  11. காய்ந்த மிளகாய் 1 உடைக்கவும்
  12. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஊறவைத்த பாசிப்பருப்பை நன்றாக நீரை வடிக்கவும்
  2. அதனுடன் வெள்ளரி, தேங்காய், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
  3. ஒரு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்க்கவும். வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கோசம்பரியில் கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்